வாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான்.
இப்படம் வெளியானபோது பார்க்க நினைத்துப் பார்க்க முடியாதவர்கள், வாழ்த்த நினைத்து மறந்துபோனவர்கள், திட்ட நினைத்துத் தவறவிட்டவர்கள் அத்தனை பேருக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
நாளை மறக்காமல் பார்த்துவிடுங்கள். ஜெயா டிவி, மதியம் 1.30.
இந்தப் படம் தியேட்டர்களுக்கே வராமல் நேராக டிவிக்கு வந்துடுத்தா..
போஸ்டர் கலாச்சாரம் மிகுந்திருந்த சென்னையில் எந்த இடத்திலும் போஸ்டர் பார்க்கவில்லை
சந்திரமௌளீஸ்வரன்: நீங்கள் இதற்கு முந்தைய படத்தை நினைத்துக்கொண்டு சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வெட்டோத்தி சுந்தரம் திரையுலகப் பிரச்னைகள் தீர்ந்த சமயத்தில் வெளியாகி ஓரளவு நன்றாகவே ஓடிய படம்.
enakkum paarkka aasai thaan para sir. But 12 pm to 3 pm current irukkaathe?
இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக …. மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைகாட்சியில் போனமாதம் போட்டுவிட்டார்கள் .
சென்ற வருட இறுதியில் வெளியான படங்களில் சொல்லிக்கொள்ள கூடிய ஒரே படம் இது தான்
உங்களுக்காக அரங்கில் சென்று இத்திரைப்படத்தைப் பார்த்தேன். உட்கார முடியலை. பார்த்தபின் தலைவலி…
மாரியப்பன், நீங்கள் இன்னொரு முறை பார்த்திருக்கவேண்டும். தலைவலி போயிருக்கும். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்.
என்னால் தியேட்டரில் பார்க்க முடியாது பாரா சார். இந்த நாட்டில் (சவூதி அரேபியா)தியேட்டர்களே இல்லை. உங்கள் எழுத்தை ரசிக்க வேண்டும் என்ற ஆவலோடு இணையத்திலிருந்து இறக்கி படத்தை பார்த்தேன் வசனங்களை ரசித்தேன். அதோடு என் மனம் கவர்ந்த ஹீரோயின் அஞ்சலியின் அழகையும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.
படம்
டாப் ராகவரே……..
நானும் dted முடிந்தவன் தான்….
அந்த வலி இருக்கும்