சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது.
இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள்.
ரைட்டர்பாராடாட்காம், தமிழ்பேப்பர்டாட்நெட் இரண்டு தளங்களும் இதுநாள் வரை ஒரே இடத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தன. என்னுடைய ரைட்டர்பாரா தளத்தை இப்போது வேறு சர்வருக்கு மாற்றியிருக்கிறேன். இந்த இடப்பெயர்ச்சியில் நேர்ந்த ஒரு சிறு குளறுபடியினால் அப்படியானது என்று தள நிர்வாகி கணேஷ் சந்திரா தெரிவித்தார்.
இந்தப் பிரச்னை இப்போது சரியாகிவிட்டபடியால்தான் இதனை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
வாஸ்து சரியில்லையோ என்னவோ. சர்வரை கொஞ்சம் கிழக்க நொக்கி திருப்பு வெச்சு பாக்க சொல்லுங்க… 😉