சில அத்தியாயங்களாக நமது கோவிந்தசாமியைக் காணவில்லை. பாவம் அவன். நகரத்து நிர்வாகத்தினரிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறானோ என்னவோ.
சூனியனின் குழுவினர் நிலவனத்தில் கொட்டகையிட்டு தங்கி இருக்கின்றனர்.
அந்த தங்கத்தவளையை கண்ட அடுத்த நொடியில் நமது தங்கதாரகை சாகரிகதவை காண்கிறான் சூனியன்.
அவளோடு ஷில்பாவும் கோவிந்தசாமியின் நிழலும் வருவதைக் கண்டதும் அவனுக்கு அனைத்தும் விளங்கிவிட்டது.
இப்போது அவன் முதலில் அழிக்க வேண்டியது கோவிந்தனின் நிழலைத்தான் என்பதை முடிவு செய்துகொண்டான். அதற்கு உதவ அந்த தங்கத்தவளை அவனுக்கு தேவைப்பட்டது.
நடுக்கானகத்தில் நான்கு பெண்களுடன் தனி ஒருவனாக நரகேசரி ஒரு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்க, சூனியன் அவனை வைத்து நிழலை அழிக்க முற்படுகிறான்.
தங்கத் தவளையின் வியர்வையை எடுத்து விஷமாக்கி, அதை அம்பில் நனைத்து, நிழல்மீது தொடுக்கிறார்கள் இவர்கள். நிழல் என்னவானது என்பதெல்லாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.