இந்த அத்தியாயம் முழுவதுமே, சூனியன் விளக்குவது போலவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சூனியன் அவனது கிரகத்தின் வனங்களை விவரிக்கிறான். நீல நகரத்தின் வெளியே மேற்கு துருவ பகுதியில் அடர்ந்த வனம் ஒன்றை கண்டறிகிறான், அங்கே மிருகங்களுடன் மக்களும் வசித்து வருகிறார்கள்.
நீல வனவாசிகள் சுவாரஸ்யமானவர்களாக இருக்கின்றனர். மிருகங்களை வாசலில் கட்டி வைத்திருப்பதை காண்கிறான், மிருகங்களை கொண்டு நீல வனவாசிகளின் வாழ்க்கை முறைகளையும் பார்க்கிறான் சூனியன்.
நீல வனவாசிகளிடம் ஒரு நூலகம் இருக்கிறது. நூலக நிர்வாகி சூனியனிடம் PDF கேட்பதெல்லாம் குபீர். கவிதை சொல்லி வரவேற்கும் கலாச்சாரம் அருமை. மனுஷின் கவிதை எப்போதும் போல அற்புதம். வனவாசிகள் சொற்களை உறிஞ்சி கொள்வதும், வீடு சென்று சொற்களை பிரித்து எடுத்து புரிந்துகொண்டுவிட்டு அதை உலக பொது ஆகிவிடுவதும் சுவாரசியம்.
அங்கே தான் சூனியன் செம்மொழிப்ரியா,நரகேசரி, அதுல்யா மூவருக்கும் தமிழ் அழகிக்கும், முல்லைக் கொடியையும் அறிமுகம் செய்து வைக்கிறான். அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி, முத்தமிட்டு அறிமுகம் செய்து கொள்கின்றனர்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!