அனுபவம்

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 16)

நாம் பிறந்து தவழத் தொடங்கியது முதல் வெயிலிலும், விளக்கொளியிலும் கூட நம்மைப் பிரியாது உடனிருக்கும் நம் நிழலுக்கு நமக்கு இருப்பதைப் போன்றே ஏதேனும் ஆசைகள் இருக்குமாவென இதுவரை தோன்றியதே இல்லை. இன்று இந்த அத்தியாயம் வாசித்ததும் தான் நம் நிழல் நம்மை எப்போதெல்லாம் திட்டியிருக்கும் என எண்ணினேன்.
கரசேவை முடித்தவுடன் வெற்றிக் களிப்புடன் திரும்பிய கோவிந்தசாமிக்கு மறுநாள் தன் முகத்தைக் கண்டவுடன் அது அச்சமூட்டுவதாகவும், அருவருப்பாக இருந்ததாகவும் ஒரு வரி இடம் பெறுகிறது. முந்தைய நாள் சாகரிகாவினை தேடி ஓடியதால் அவனுக்கு ஏற்பட்ட களைப்பு தான் அதுவெனினும், கரசேவை முடித்த மாக்கள் ஒருவேளை அடுத்து தங்களின் முகத்தினை கண்ணாடியில் பார்த்திருந்தால் அவர்களுக்கு அப்படித்தான் தோன்றியிருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. ஆனால் அந்த உணர்ச்சியெல்லாம் மனிதர்களுக்குத் தானே உண்டாகும்.
கோவிந்தசாமியின் நிழல் தன்னையே கோவிந்தசாமியாய் நினைத்துக் கொள்வதும், அதற்கும் கோவிந்தசாமிக்கும் இடையே பிணக்கு ஏற்படுவதோடும் இவ்வத்தியாயம் முடிவடைந்திருக்கிறது. காத்திருப்போம்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி