கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 16)

சூனியன் தன்னுடன் இல்லை என்றதுமே கோவிந்தசாமியின் நிழல் தன்னை சுதந்திரனாக எண்ணி வெளியே சுற்ற ஆரம்பத்துவிட்டது.
சூனியன் சொல்லிக் கொண்டிருந்த கதையை இப்போது யார் சொல்வது?
பா.ரா.வாக இருக்கலாம். இல்லையென்றால் வேறு யாராவதுகூட இருக்கலாம். இந்தக் கதையில் வரும் திருப்பங்கள் அப்படி.
ஏற்கனவே இடையிடையே வந்து பா.ரா. சொல்லும் கதையால் கடுப்பாகி இருக்கும் சூனியனுக்கு இந்த நிழல் வேறு சுதந்திரமாய் சுற்றுவது இன்னும் கடுப்பேற்றலாம். அதுமட்டுமன்றி வெளியே சென்ற அந்த நிழல் சந்தித்தது அந்த முட்டாளை எனத் தெரிந்தால்?
அந்த நிழல் சாகரிகாவைத் தேடித்தான் செல்லும் என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கு அவள் மீது ஈடுபாடு இல்லையென்றும் வெறுப்பே உள்ளதாயும் அந்த ஃப்ளாஷ்பேக்கில் தெரிகிறது.
ஃப்ளாஷ்பேக்கில் அயோத்தி, மதுரா என சங்கிகள் உலகத்துக்குள் சிறிது பயணிக்க முடிகிறது.
கோவிந்தசாமியை சந்திக்கும் நிழல் அவனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு ஆவேசமாய் செல்வதாய் முடிகிறது அத்தியாயம்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி