பாராவிற்கும் சூனியனுக்குமான போர் இவ்வாறாக மாறும் என எண்ணவில்லை. இது போன்ற ஒரு திருப்பத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. புராணக்கதைகளில் கானகத்தில் போர் நடைபெற்ற காட்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போர் நவீன காலப் போர் அல்லவா போன்று இருக்கிறது. சாகரிகா,ஷில்பா, நிழல் அவ்விடத்திற்கு வரும் பொழுது சூனியனின் படைப்புகள் ஒரு சேர அவர்களைக் காண்கிறார்களே என எண்ணிக் கொண்டிருக்கும் போதே தவளையைப் பிடித்ததற்கான காரணத்தை குழந்தைகளின் வெளிப்படுத்துகிறான். அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அருமையோ அருமை.
சாகரிகாவுக்காக பாரா எழுதிய கதையில் வருகிற எதிர்பாராத திருப்பத்தில் கோவிந்தசாமியின் நிழல் ஒரு கண்ணி என்ற வரி மிகவும் நிதர்சனமான வரி ஆகும். நரகேசரி எய்ய உள்ள அம்பு நிழலைச் சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்