கோவிந்தசாமியைப் போன்று கோவிந்தசாமியின் நிழலும் சாகரிகாவை மனதார விரும்ப ஆரம்பித்தது. நிழலும் அவனின் பிரதி பிம்பம்தானே வேறு எப்படி இருக்கும். சாகரிகாவின் செய்கைகளால் அன்பின் உச்சத்திற்குச் செல்கிறது. ஷில்பாவிடம் அவளைத் தவிர வேறு யாருக்கும் தன் மனத்தில் இடமில்லை. சாகரிகாவும் நிழலும் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி உறுதிப்படுத்திக் கொள்கிறது. ஷில்பா அதனிடம் சீண்டினாலும் சாகரிகா தன் இதயராணி, தேவதை என்று போற்றுகிறது.கோவிந்தசாமி நீல நகரத்திற்குள் தனக்கெதிராக சதி வேலை செய்திருப்பானா என்று நிழலிடம் கேட்கும் பொழுது அவன் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை என்கிறது. நிழலைக் கொண்டு தனக்கெதிராகச் செயல்படுவர்களைக் கண்டறிய வேண்டும் என்பதைல் முனைப்புடன் செயல்பட்டு திட்டமும் தீட்டுகிறாள். நீல வனத்திற்குள் அவனைக் கொண்டு சென்று சமனஸ்தானத்தில் குறுநில மன்னனாக்கி விட்டால் அவனுக்குக் கீழ் எண்ணற்றோர் இருப்பர்.அவர்களைக் கொண்டு தனக்கு எதிராகச் செயல்படுபவர்களைக் கண்டறியலாம் என எண்ணி அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்று தன் நோக்கத்தையும் கூறுகிறாள். தன்னைச் சக்கரவர்த்தி என்றதும் அதற்கு பெருமை கொள்ளவில்லை. எனவே உடனடியாக ஒரு முடிவெடுத்தது. சாகரிகாவிற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.