நம் சூனியன் தான் கபடவேடதாரி என்று இது வரையில் நினைத்திருந்தேன். அனால் இந்த அத்தியாயத்தில் தான் பாரா தான் நம் கபடவேடதாரி என்று தெரிகிறது.
பாரா தான் சாகரிகாவின் மூளைக்குள் சென்று அவளை ஆக்ரமித்து, நினைவுகளை அழித்து, இவர்கள் வாழ்க்கையில் வில்லனாக இருக்கிறார்.ஆனால் எதற்கு இதையெல்லாம் செய்தார் என்று தான் தெரியவில்லை.
இந்த அத்தியாயத்தில் எழுத்தாளரின் இந்த இரண்டு வரிகள் என்னை வெகுவாய் ஈர்த்தது,
“எனக்கு ஒற்றுப் பிழை இல்லாமல் எழுத வராது. – அதுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படை தகுதி”
“திராவிடம் என்பது ஒரு சித்தாந்தமல்ல. அது ஓர் உணர்வு. சித்தாந்தங்கள் சிதறடிக்கப்படலாம். உணர்ச்சி ஒருபோதும் அழியாது.”
சூனியனுக்கும் கோவிந்தசாமிக்குமான கதைக்களமாக இருக்கும் என இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இது சூரியனுக்கும் பாராக்குமான போர்க்களமாக மாறும் என எதிர்ப்பார்க்கிறேன்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!