தமிழ்

செம்மொழி மாநாடு 2010

ஆரவாரமான எதிர்ப்புகள், ஆயிரம் குற்றங்குறைகள், ஏற்பாட்டுக் குளறுபடிகள், கூட்டம், நெரிசல், தள்ளுமுள்ளு, குழப்படி இன்னபிற. இவ்வரிசையில் பட்டியலிட இன்னும் பல நூறு இருந்தாலும் செம்மொழி மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. கணக்கற்ற கோடிகள் செலவில் எதற்காக இப்படியொரு மாநாடு என்று ஆரம்பித்து, இதனால் சாதித்தது என்ன என்பது வரை ஒரு புத்தகமே வெளியிடக்கூடிய அளவுக்குக் கேள்விகள் இருந்தாலும், உலகம் முழுதும் தமிழ்ப்பக்கம் திரும்பிப் பார்க்கும்படியான ஒரு தருணத்தைக் கலைஞர் வழங்கியதை மறுக்க இயலாது. சந்தேகமில்லாமல் இது ஒரு தனிநபர் சாதனை.

மாநாட்டு தினங்கள் முழுதும் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அவரவர் அடுத்த நிலை ஆள்கள், அடுத்ததற்கு அடுத்த நிலை, அதற்கடுத்த நிலை என்று ஆளும் வர்க்கம் முழுதும் கோவைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. எனவே தொண்டர்களும். அநேகமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திமுகவினர் வழக்கம்போல் வேன் வைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். மேலிடத்து உத்தரவு போலிருக்கிறது. கட்சிக்கொடியை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள்.

கோவை மக்களுக்கு மிரட்சி கலந்த திகைப்பு….

மீதிக் கட்டுரையை இட்லிவடையில் வாசிக்கவும். எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் அழைத்து, தனக்கு அதை அளித்துவிடும்படி வற்புறுத்தி வாங்கிக்கொண்டார். நண்பர் என்பதால் மறுக்க இயலவில்லை.

கட்டுரை இங்கே இருக்கிறது.

Share

4 Comments

 • > உலகம் முழுதும் தமிழ்ப்பக்கம் திரும்பிப் பார்க்கும்படியான
  > ஒரு தருணத்தைக் கலைஞர் வழங்கியதை மறுக்க இயலாது

  వెంకటేశ్వరుడు వెంకన్న அரோகரா

 • ஹே! இது நல்ல போங்கா இருக்குதே !
  ரெண்டு ப்ளாக் -யும் படிக்க வைக்கிற உத்தியா ?!
  செம்மொழி நன்றிகள் .

  உ .வே . ச வை திட்டமிட்டு மறைத்தாலும் ,சமய இலக்கியங்களை மறுத்தாலும் , மாநாட்டு பேச்சில் கமபரமாயனமும் , ஆழ்வார் , நாயனமர் பற்றியும் காதில் விழுந்து கொண்டே இருந்தது . தமிழின் பெயரால் ஒரு தேர் திருவிழா .

  அன்புடன் ,
  சத்திய நாராயணன் .

  • லஷ்மி, நல்ல ஹைப்பர்லிங்க். ஆனால் ஒரு விஷயம். கலைஞரை மற்றவர்கள் புகழ்வதாலோ, அவருக்கு அந்த போதை பிடித்திருப்பதாலோ உங்களுக்கும் எனக்கும் ஒரு நஷ்டமுமில்லை. இளையராஜா விஷயம் அப்படியல்ல. கலைஞர் தடுமாறலாம். கலைஞன் தடுமாறக்கூடாது அல்லவா?

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி