அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 19)

‘ஜிங்கோ பிலோபா’ ‘விஷம் முறிக்கும் விஷமரம்’, ‘செம்மொழிப் பிரியா’, ‘திராவிடத் தாரகை’, ‘கலாச்சார செயலர்’ என்று இந்த அத்தியாயத்தில் புனைவில் புகுந்து விளையாடியிருக்கிறார் நம் எழுத்தாளர்.
கதையின் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் இருக்கிறது.
“கோவிந்தசாமிக்கு அந்த மரத்தின் மகிமை தெரிந்து இலைகளைச் சாப்பிட்டாலும் மரம் தான் மொட்டையாகுமே தவிர அவன் மாற மாட்டான்.” – இவ்வளவு காழ்ப்புணர்வுகளுக்கு மத்தியிலும், கோவிந்தசாமியின் உடலுக்குள் சென்று சூனியன் தனது ஆட்டத்தைத் தொடர்கிறான்.
சூனியன் ‘செம்மொழிப்ரியா’ எனும் பெயரில் வெண்பலகை வாயிலாக தனது திட்டத்தை செயல்படுத்துகிறான். இந்த திட்டத்தில், முதல் கணையைச் சாகரிகாவின் மீது தொடுக்கிறான். இதற்கு பாராவின் பதில் என்னவாக இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.
யுத்தம் இனிதே துடங்கியது.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி