கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை (அத்தியாயம் 1)

ஆசிரியர் பா. ரா. அவர்களின் பல நூல்களை வாசித்திருக்கிறேன். அவர்களின் எழுத்துக்கு ஒரு தனி தன்மையுண்டு. அந்த வகையில் இந்த “கபடவேடதாரி” நாவலினை, வாசிக்க ஆரம்பித்தேன், முதல் அத்தியாயத்தில் இருந்து இது எதோ ஒரு புதிய கோணத்தில் புனையப்பட்ட வேடதாரி என்று என்னைப்படிக்கத் தூண்டியது.

ஆரம்பமே ஒரு பிரமாண்ட உலகம். நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வெகுவான விஷயங்களை முதல் அத்தியாயத்தில் கொடுத்திருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்தும் பாராட்டும்.

நான் ஒரு சூனியன் என்றதுமே, ஆகா இது ஒரு மாறுபட்ட கதை என்பது தெரிந்தது. “சூனியக்காரன், சைத்தான், சாத்தான்” நான் எதுவாக வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் எல்லாவற்றிலும் நான் சூனியக்காரன் ஆகா எஞ்சியிருப்பேன் என்ற ஆணவத்துடன் ஆரம்பிக்கும் இந்த கபட வேடதாரி நமக்கு ஒரு மாறுபட்ட நாவலாய் இருக்கப்போகிறது என்பதில் ஐய்யமில்லை.

ஒரு மரண தண்டனை கைதியின் கடைசி நேர முறையீடாக வரும் அந்த வார்த்தைகள், எந்த குற்றமும் செய்யாமல் சந்தர்ப்பசூழ்நிலையால் கைதியாக மாட்டிக்கொண்டு தனது இறுதி நாட்களை எண்ணுவதுபோல இருந்தாலும் இந்த கதையின் குற்றவாளி நான் ஒரு நிரபராதி இந்த அரசாங்கம் என்னை வீணாக தண்டிக்கிறது என்று சொல்லும் வார்த்தைகள் அவனது கம்பீரத்தை கண் முன்னே ஒரு காட்சியாக தோன்றுகிறது.
கைதியை அடைத்துவைத்திருக்கும் ராட்சச நிலக்கடலையின் ஓட்டுக்குள் வாழும் இந்த கைதியின் மனதைரியம் கொஞ்சம் நம்மில் எல்லோருக்கு வேண்டுமென்றே தோணுகிறது. இறுதியாக யூதாஸுடன் உரையாடும் சூனியக்காரனின் வார்த்தைகளில் எத்தனை கம்பீரம்.
இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து இறுதிக்கட்ட விசாரணைக்காக நியாயமன்றம் வரும்போது சிறையில் இருந்து வெளியில் வரும்போது கண்ட வெளிச்சம் கடவுளை போல அருவருப்பானது என்று சொல்லும் அந்த சூனியக்காரன், மேலும் துவார யுகத்தில் யாதவர்கள் எவ்வாறு அடித்துக்கொண்டு அழிந்து போனார்களோ அதுபோல ஒவ்வொரு மனித இனக்குழுவினிடையே சிறு கலகம் மூட்டி அவரகளாகவே அடித்துக்கொண்டு அழியவேண்டு என்ற கட்டளையுடனே நான் இங்கு வந்தேன் என்று சொல்லுவது அவன் தனது இறுதி அத்தியாயத்திற்ககு தாயாறாகிவட்டான் என்று நம்மை தீர்மானிக்கவைக்கிறது.

இந்த நாவலின் முக்கிய பாத்திரமான சூனியக்காரன் தனது கதையைச் சொல்லத்தொடங்கி, அவன் தனக்கு விதிக்கபட்டிருக்கும் இந்த மரண தண்டனையில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்றும் அது எவ்வாறு சாத்தியமாகுமென்றும் அதுதான் தனது நோக்கம் என்றும் ஆனால் என்னால் தப்பிக்கவே முடியாது போலிருக்கிறது என்றே தனக்கு மரண தண்டனை கொடுத்த நீதி கோமான்கள் சபித்துவிட்டு எப்படியாவது தப்பித்துவிடவேண்டியதுதான் என்ற முடிவெடுக்கிறான்.

முதல் அத்தியாயம் வாசித்து பின்னும், அந்த பிரமாண்டத்திலிருந்து மீளமுடியவில்லை அது அடுத்த அடுத்த அத்தியாயத்தில் எவ்வாறு இருக்கும் என்ற ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பை நம்மில் ஏற்படுத்தியிக்கிறார் ஆசிரியர்.

மீண்டும் சந்திப்போம் அடுத்த அத்தியாயத்துடன் சூனியக்காரன் தப்பித்தானா இல்லையா என்ற விடையுடன்..

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி