கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 1)

முதல் அத்தியாயத்தில் என்னைப்படிக்கத் தூண்டாத எந்தவொரு நாவலையும் நான் முழுவதுமாய் படித்ததில்லை, அது யார் எழுதிய நாவலாக இருந்தாலும், யார் பரிந்துரைத்தாலும் சரி.
அப்படி நான் படிக்காமல் சேகரித்து வைத்திருக்கும் எத்தனையோ புத்தகங்கள் அதற்கு ஆதாரமாய் இன்னும் இருக்கின்றன.
கபடவேடதாரியின் முதல் அத்தியாயம் எனக்கு சொன்ன சேதி என்னவெனில் இது என்னால் முழுமையாகப் படிக்கப்படப்போகிற நாவலாய் இருக்கப்போகிறது என்பதே.
முடிந்தவரை இந்தக் கதைக்குள் நான் நுழையப்போவதில்லை. என்னுடைய விமர்சனத்தின் நோக்கம் இந்த நாவலை படிக்கத் தூண்டுவதேயன்றி பிரதி எடுத்து உங்களுக்கு தருவதல்ல.
அது ஒரு பிரமாண்ட உலகம். நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட பல விஷயங்களை முதல் அத்தியாயத்தில் கொட்டித்தரும் ஆசிரியருக்கு பாராட்டும் வாழ்த்தும். இன்னும் என்னால் அந்த பிரமாண்டத்தினருந்து மீளமுடியவில்லை.
இந்த நாவலின் பிரதான பாத்திரம் கதையைச் சொல்லத்தொடங்கி முதல் அத்தியாயத்தில் ஒரு முடிவெடுக்கிறது. தப்பிக்க வேண்டும் என்பது அதன் நோக்கம். என்னால் தப்பிக்கவே முடியாது போலிருக்கிறது.
Share