ஆண்டாளுக்கு வந்த சோதனை

எனது முந்தைய பதிவுக்குத் தமிழ் இந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு நீண்ட எதிர்வினை ஆற்றியிருப்பதை இப்போதுதான் கண்டேன். அரவிந்தனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். நான் சாதாரணமாக எழுதிய கட்டுரையில் ஆண்டாள் தன்னிஷ்டத்துக்குத் தானாக வந்து விழ, மனிதர் ரிக் வேதம் தொடங்கி சூஃபி வரை உலகளந்து, இறுதியில் அந்தப் பத்து பைசா பெறாத கட்டுரைக்கு ஏதோ அரசியல் உள்நோக்கம் வேறு இருப்பதாகச் சொல்லிவிட்டார். இப்படியெல்லாமும் என்னைப் பெரிய ஆள் ஆக்கு என்று ஆண்டாள்தான் அவரிடம் மானசீகத்தில் சொல்லியிருக்கவேண்டும்.
அது நிற்க. ஆண்டாளை போர்னோகிராபி எழுதும் எழுத்தாளர் என்று நான் எங்கே சொன்னேன்? இது அபாண்டமல்லவா? ஆண்டாளின் சில வரிகளில் அழகான படுக்கையறைக் காட்சிகள் இருக்கின்றன. அந்தத் தரத்தில் படுக்கையறைக் காட்சியை இன்றுவரை வேறு யாரும் வருணித்ததில்லை என்றுதானே எழுதியிருந்தேன்?
ஆண்டாள் என்று பேசும்போது ஒரு படைப்பாளியாக அவர் எனக்கு முதலில் தெரிவதும், அரவிந்தனுக்கு பக்தி செய்து உய்தவராகத் தெரிவதும்தான் இங்கு வித்தியாசம், பிரச்னை.
தவிரவும் Porn என்பதை அரவிந்தன் பஞ்சமாபாதகத்தில் ஒன்றாகப் பார்க்கிறாரா என்றும் தெரியவில்லை. நான் அப்படிப் பார்க்கவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். எழுத்தில் பல விதங்கள், பல ரகங்கள் உண்டு. எதையும் எழுதிப் பார்க்கலாம். எப்படியும் எழுதிப் பார்க்கலாம். எந்தத் தவறும் இல்லை. எழுத்து ரசமாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா  என்பது மட்டும்தான் என் அக்கறை. அந்தக் கட்டுரையிலும் அதைத்தான் சொல்லியிருந்தேன்.
ஆண்டாள் உதாரணம் ஏன் வந்தது என்பதற்கு இப்போது யோசிக்கும்போது ஒரு காரணம் தோன்றுகிறது. உயர்ந்த தரத்தில் எழுதும்போது எழுதப்படும் விஷயமும் உயர்வாகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே அது வந்தது என்றும் கொள்ளலாம் அல்லவா? எழுத்தால் எழுதுபவன் உயர்வதும் தாழ்வதும் போல, எழுதப்படும் விதத்தாலும் சாராம்சத்தின் உயர்வு தாழ்வு தீர்மானிக்கப்படக்கூடாது என்று யார் சொல்ல முடியும்?
எனக்கு ஆண்டாள் ஒரு கவிஞர். அவர் பெண் கவிஞரா, புனைபெயர் வைத்துக்கொண்டவரா, பாவை நோன்பு இருக்கிற வயதில் [எத்தனை வயது என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.] கொங்கை, அல்குல் எல்லாம் தெரிந்தவராக இருந்தாரா, அந்த வயதில் [ஞானப்பால் குடித்த கதை ஏதும் இல்லாவிட்டாலும்] அவருக்கு இலக்கண சுத்தமான விருத்தம் வசப்பட்டதா என்பதெல்லாம் முக்கியமே இல்லை. நாயக நாயகி பாவம் பற்றியும் எனக்குச் சந்தேகங்கள் இல்லை. ‘காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி’ பற்றியெல்லாம் கூட எனக்கு இரண்டாம் கருத்தே கிடையாது. ஆண்டாளின் பக்தி, ஆண்டாள் என்னும் கருத்துருவாக்கம் மூலம் வெளிப்படுத்த முனையும் தத்துவம் அனைத்தும் எனக்கு ஏற்புடையதே.
ஆனால் நான் குறிப்பிட்டது இவை எதுபற்றியும் அல்ல. ஆண்டாள் என்னும் எழுத்தாளர் எழுதி வைத்த ஒரு வரி. அதில் பொதிந்திருக்கும் அழகு. கிளுகிளுப்பான ஒரு விஷயத்தை எத்தனை அழகுமேவ அவர் எடுத்துரைக்கிறார் என்கிற ஒற்றைவரி எடுத்துக்காட்டு.
இது ஏன் இத்தனை கொதிப்படையச் செய்யவேண்டும் என்று புரியவில்லை. ஆண்டாள், கடவுளைக் காதலித்தாள் என்பதனாலேயே அவளது படுக்கையறை விவரிப்புகள் வரும்போது கண்மூடி, கைகூப்பிக்கொண்டுவிட வேண்டுமா? என்னால் முடியாது!
அவரைப் பிராயம் தொடங்கி ஆதரித்து எழுந்த தன்னுடைய தடமுலைகள் துவரைப் பிரானுக்கே என்று அவள் டிக்ளேர் செய்யும்போது எனக்கு விசிலடிக்கத் தோன்றினால் அரவிந்தனுக்கு ஏன் கோபம் வருகிறது?
‘ஆண்டாளின் பாசுரங்களில் தத்துவார்த்த குறியீடாக மாற்றுவதற்கு அப்பால், ஆண்டாள் கோபிகைகளின் உணர்ச்சிகளை தனதாக மாற்றினாள். அதன் மூலம் இறையுடன் கலந்தாள்.’ என்று அரவிந்தன் சொல்கிறார். மிகவும் சரி. சினிமா ஹீரோவின் சாகசங்களை லயித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தானே செய்ததுபோல் மனத்துக்குள் கற்பனை செய்து மகிழும் எளிய பாமர உணர்வின் வெளிப்பாடல்லவா இது? ஆண்டாளின் ஹீரோ கண்ணன் என்பதால் மட்டும் ஃபார்முலா மாறிவிடுமா?
நாயகனுடன் டூயட் பாடும் நாயகியைத் தன்னுடன் ஆடிப்பாடுவது போல் ஓர் எளிய ரசிகன் கற்பனை செய்து கொள்வதற்கும், ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர் கோதை முன்கூற, அவள் தானே ஊடி, கூடி, உணர்ந்து, புணர்ந்து பாடி வைத்ததற்கும் என்ன வித்தியாசம்? அதை அனுபவித்துப் படித்தால் செய்த பாவங்களே தொலைந்துவிடும் என்கிறது பிரபந்தம். [பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே.] நான் பிரபந்தத்தை நம்புகிறேன்! நீலகண்டனுக்கு நம்புவதில் என்ன பிரச்னை?
இருமை நிலையிலிருந்து இரண்டற்ற இறை நிலைக்குப் போவதற்கு நாயக நாயகி பாவம் ஆண்டாளுக்கு உதவியிருக்கிறது. அரவிந்தன் சொல்வதில் தவறொன்றுமில்லை. இறையுடன் கலத்தல் என்பதற்கும் காமத்தின் வழி மேற்கொள்ளும் பயணம்தான் அவளுக்கு அவசியமாகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சரும் இறையுடன் கலந்தவர்தான். அந்த ப்ராஜக்டைக் கையில் எடுப்பதற்கு முன்னால் தன் மனைவியைக் கூப்பிட்டு மந்திரித்து உட்காரவைத்துவிட்டுத்தான் வேலையை ஆரம்பிக்கிறார். மனைவியை இறைவியாகக் கருதி வழிபடுதல் ஒரு வழி என்பது போல, இறைவனை இணையாகக் கருதிக் கலப்பதும் இன்னொரு வழி.
இரண்டிலும் பிழையில்லை. இருவர் பாதையிலும் எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. ஆனால், ‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்தாவியையாகுலஞ்செய்யும்’ என்று அவள் உளக் காமத்தின் உச்சநிலைக்குப் போவதை பக்தியுடன் தான் பார்க்க வேண்டுமா? வரிகளை ரசிக்கக் கூடாதா? இந்த மாதிரி ஏன் வேறு யாராலும் எழுத முடியவில்லை என்று ஆதங்கப்படக்கூடாதா? இதிலுள்ள பாலியல் சார்ந்த உளக்கிளர்ச்சியைச் சுட்டிக்காட்டினால் பாவமாகிவிடுமா? இல்லை பாவமே என்று அவளேதான் சர்டிபிகேட் கொடுத்துவிடுகிறாளே.
மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்து
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங்கு இலக்காய் நான் இருப்பேனே
என்ற வரியில் எனக்கு கண்ணன், ஆண்டாள், நாயக நாயகி பாவம், யோகம், இரண்டறக் கலத்தல் இன்னபிற அனைத்தும் அழிந்துவிடுகிறது. காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்ட ஒரு பெண் தன் உள்ளத்தை ஒளிக்காமல் வெளியிடும் துணிச்சலை வியக்கத் தோன்றவில்லை? அவளது எண்ணம், எத்தனை அற்புதமாகச் சொற்களுக்குள் தன்னைச் சொருகிக்கொண்டு வெளியே வருகிறது என்று வாய்பிளக்கத் தோன்றவில்லை? இப்படி ஒருத்தி எழுதியிருக்கிறாள், முடிந்தால் யாராவது முயற்சி செய்து பாருங்கள் என்று சொன்னால் அது ஆண்டாளை போர்னோகிராபி ரைட்டராக்குவதாகுமா? அரவிந்தன் மன்னிக்கவேண்டும், எழுத்தை எனக்கு எழுத்தாக மட்டுமே பார்க்கத் தெரியும். ஹிந்துத்வ கலர் கண்ணாடி எனக்கு அவசியமில்லை. [ஏற்கெனவே சோடாபுட்டி. மைனஸ் மூணு.]
‘ஆர்க்கும் என் நோய் இது அறியலாகா – கார்க்கடல் வண்ணன் கைகண்ட யோகம் தடவத் தீரும்’ என்கிற ஆண்டாளுக்கே இம்மாதிரியான மனத்தடைகள் எதுவும் இல்லாதபோது தமிழ் ஹிந்துவுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது என்பதுதான் புரியவில்லை.
பி.கு 1: இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் சில பாடல் வரிகள் எங்கெங்கே வருகிறது என்று சட்டென்று என்னால் சரியாகச் சொல்ல இயலாது.  ஆனால் கண்டிப்பாக ஆண்டாள் எழுதியவைதான். சந்தேகமில்லை. மிகச்சிறு வயதில், காஞ்சீபுரத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஆதரவில் நடந்த ஒரு பாடசாலையில் சில காலம் படித்தேன். அப்போது அர்த்தமெல்லாம் தெரியாமல் ஒவ்வொரு வரியையும் ஆசிரியர் சொல்ல, திரும்ப மூன்று மூன்று முறை சொல்லி உருப்போட்டேன். அர்த்தம் இழந்து அவை மனத்துக்குள் தங்கிவிட்டன. மிகப்பல ஆண்டுகள் கழித்து – எழுத ஆரம்பித்த பிறகே ஆண்டாளும் இன்னபிறரும் அர்த்தமுடன் ஜீரணமானார்கள். இப்போது அரவிந்தனுக்காகச் சில வரிகளை மீளோட்டம் செய்து பார்த்து பொருத்தமான சிலவற்றை மட்டும் மேலே தந்திருக்கிறேன். புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால் கண்டிப்பாக எந்தப் பாசுரம், எண் என்றெல்லாம் அடைப்புக்குறிகளுக்குள் தந்துவிடலாம். சோம்பல் தடுக்கிறது. ஆண்டாளிடம் இன்னும் ரசமான வரிகள் பல உண்டு. அவளை சற்றே ஆசுவாசமாக நினைவுகூர ஒரு வாய்ப்பளித்த அரவிந்தன் நீலகண்டனுக்கு நன்றி.
பி.கு. 2: //அவ்லானின் தெரசாவும் அரேபியாவின் ரபியாவும் யூதத்தின் உன்னதபாடல்களும் வெறும் ஃபோர்னோகிராபி அல்லது திறமையான கவித்துவமான ஃபோர்னோகிராபி எனலாமா? பருவத்தின் காம எழுச்சிக்கும் வயோதிகத்தின் காம ஏக்கத்துக்குமான வடிகால் எனலாமா? பாஸ்ரா பட்டணத்து ரபியாவின் பாடல்களில் எழும் வேட்கையை அராபிய எழுத்தாளன் எவனாவது ஃபோர்னோகிராஃபி என சொல்வானா? அல்லது அந்த தரத்தில் நான் ஃபோர்ன் எழுத இறைவன் அருள் தர வேண்டும் என சொல்வானா?// என்று அரவிந்தன் தனது கட்டுரையில் கேட்டிருக்கிறார். இவை நான் இதுவரை வாசித்தறியாதவை. எனவே வாசித்துவிட்டு பதில் சொல்லுகிறேன். புதிதாகப் படிக்கச் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியமைக்குத் திரும்பவும் நன்றி.

எனது தேடாதே கிடைக்காது கட்டுரைக்குத்  தமிழ் இந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு நீண்ட எதிர்வினை ஆற்றியிருப்பதைக் கண்டேன். அரவிந்தனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். நான் சாதாரணமாக எழுதிய கட்டுரையில் ஆண்டாள் தன்னிஷ்டத்துக்குத் தானாக வந்து விழ, மனிதர் ரிக் வேதம் தொடங்கி சூஃபி வரை உலகளந்து, இறுதியில் அந்தப் பத்து பைசா பெறாத கட்டுரைக்கு ஏதோ அரசியல் உள்நோக்கம் வேறு இருப்பதாகச் சொல்லிவிட்டார். இப்படியெல்லாமும் என்னைப் பெரிய ஆள் ஆக்கு என்று ஆண்டாள்தான் அவரிடம் மானசீகத்தில் சொல்லியிருக்கவேண்டும்.

அது நிற்க. ஆண்டாளை போர்னோகிராபி எழுதும் எழுத்தாளர் என்று நான் எங்கே சொன்னேன்? இது அபாண்டமல்லவா? ஆண்டாளின் சில வரிகளில் அழகான படுக்கையறைக் காட்சிகள் இருக்கின்றன. அந்தத் தரத்தில் படுக்கையறைக் காட்சியை இன்றுவரை வேறு யாரும் வருணித்ததில்லை என்றுதானே எழுதியிருந்தேன்?

ஆண்டாள் என்று பேசும்போது ஒரு படைப்பாளியாக அவர் எனக்கு முதலில் தெரிவதும், அரவிந்தனுக்கு பக்தி செய்து உய்தவராகத் தெரிவதும்தான் இங்கு வித்தியாசம், பிரச்னை.

தவிரவும் Porn என்பதை அரவிந்தன் பஞ்சமாபாதகத்தில் ஒன்றாகப் பார்க்கிறாரா என்றும் தெரியவில்லை. நான் அப்படிப் பார்க்கவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். எழுத்தில் பல விதங்கள், பல ரகங்கள் உண்டு. எதையும் எழுதிப் பார்க்கலாம். எப்படியும் எழுதிப் பார்க்கலாம். எந்தத் தவறும் இல்லை. எழுத்து ரசமாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா என்பது மட்டும்தான் என் அக்கறை. அந்தக் கட்டுரையிலும் அதைத்தான் சொல்லியிருந்தேன்.

ஆண்டாள் உதாரணம் ஏன் வந்தது என்பதற்கு இப்போது யோசிக்கும்போது ஒரு காரணம் தோன்றுகிறது. உயர்ந்த தரத்தில் எழுதும்போது எழுதப்படும் விஷயமும் உயர்வாகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே அது வந்தது என்றும் கொள்ளலாம் அல்லவா? எழுத்தால் எழுதுபவன் உயர்வதும் தாழ்வதும் போல, எழுதப்படும் விதத்தாலும் சாராம்சத்தின் உயர்வு தாழ்வு தீர்மானிக்கப்படக்கூடாது என்று யார் சொல்ல முடியும்?

எனக்கு ஆண்டாள் ஒரு கவிஞர். அவர் பெண் கவிஞரா, புனைபெயர் வைத்துக்கொண்டவரா, பாவை நோன்பு இருக்கிற வயதில் [எத்தனை வயது என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.] கொங்கை, அல்குல் எல்லாம் தெரிந்தவராக இருந்தாரா, அந்த வயதில் [ஞானப்பால் குடித்த கதை ஏதும் இல்லாவிட்டாலும்] அவருக்கு இலக்கண சுத்தமான விருத்தம் வசப்பட்டதா என்பதெல்லாம் முக்கியமே இல்லை. நாயக நாயகி பாவம் பற்றியும் எனக்குச் சந்தேகங்கள் இல்லை. ‘காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி’ பற்றியெல்லாம் கூட எனக்கு இரண்டாம் கருத்தே கிடையாது. ஆண்டாளின் பக்தி, ஆண்டாள் என்னும் கருத்துருவாக்கம் மூலம் வெளிப்படுத்த முனையும் தத்துவம் அனைத்தும் எனக்கு ஏற்புடையதே.

ஆனால் நான் குறிப்பிட்டது இவை எதுபற்றியும் அல்ல. ஆண்டாள் என்னும் எழுத்தாளர் எழுதி வைத்த ஒரு வரி. அதில் பொதிந்திருக்கும் அழகு. கிளுகிளுப்பான ஒரு விஷயத்தை எத்தனை அழகுமேவ அவர் எடுத்துரைக்கிறார் என்கிற ஒற்றைவரி எடுத்துக்காட்டு.

இது ஏன் இத்தனை கொதிப்படையச் செய்யவேண்டும் என்று புரியவில்லை. ஆண்டாள், கடவுளைக் காதலித்தாள் என்பதனாலேயே அவளது படுக்கையறை விவரிப்புகள் வரும்போது கண்மூடி, கைகூப்பிக்கொண்டுவிட வேண்டுமா? என்னால் முடியாது!

அவரைப் பிராயம் தொடங்கி ஆதரித்து எழுந்த தன்னுடைய தடமுலைகள் துவரைப் பிரானுக்கே என்று அவள் டிக்ளேர் செய்யும்போது எனக்கு விசிலடிக்கத் தோன்றினால் அரவிந்தனுக்கு ஏன் கோபம் வருகிறது?

‘ஆண்டாளின் பாசுரங்களில் தத்துவார்த்த குறியீடாக மாற்றுவதற்கு அப்பால், ஆண்டாள் கோபிகைகளின் உணர்ச்சிகளை தனதாக மாற்றினாள். அதன் மூலம் இறையுடன் கலந்தாள்.’ என்று அரவிந்தன் சொல்கிறார். மிகவும் சரி. சினிமா ஹீரோவின் சாகசங்களை லயித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தானே செய்ததுபோல் மனத்துக்குள் கற்பனை செய்து மகிழும் எளிய பாமர உணர்வின் வெளிப்பாடல்லவா இது? ஆண்டாளின் ஹீரோ கண்ணன் என்பதால் மட்டும் ஃபார்முலா மாறிவிடுமா?

நாயகனுடன் டூயட் பாடும் நாயகியைத் தன்னுடன் ஆடிப்பாடுவது போல் ஓர் எளிய ரசிகன் கற்பனை செய்து கொள்வதற்கும், ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர் கோதை முன்கூற, அவள் தானே ஊடி, கூடி, உணர்ந்து, புணர்ந்து பாடி வைத்ததற்கும் என்ன வித்தியாசம்? அதை அனுபவித்துப் படித்தால் செய்த பாவங்களே தொலைந்துவிடும் என்கிறது பிரபந்தம். [பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே.] நான் பிரபந்தத்தை நம்புகிறேன்! நீலகண்டனுக்கு நம்புவதில் என்ன பிரச்னை?

இருமை நிலையிலிருந்து இரண்டற்ற இறை நிலைக்குப் போவதற்கு நாயக நாயகி பாவம் ஆண்டாளுக்கு உதவியிருக்கிறது. அரவிந்தன் சொல்வதில் தவறொன்றுமில்லை. இறையுடன் கலத்தல் என்பதற்கும் காமத்தின் வழி மேற்கொள்ளும் பயணம்தான் அவளுக்கு அவசியமாகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சரும் இறையுடன் கலந்தவர்தான். அந்த ப்ராஜக்டைக் கையில் எடுப்பதற்கு முன்னால் தன் மனைவியைக் கூப்பிட்டு மந்திரித்து உட்காரவைத்துவிட்டுத்தான் வேலையை ஆரம்பிக்கிறார். மனைவியை இறைவியாகக் கருதி வழிபடுதல் ஒரு வழி என்பது போல, இறைவனை இணையாகக் கருதிக் கலப்பதும் இன்னொரு வழி.

இரண்டிலும் பிழையில்லை. இருவர் பாதையிலும் எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. ஆனால், ‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்தாவியையாகுலஞ்செய்யும்’ என்று அவள் உளக் காமத்தின் உச்சநிலைக்குப் போவதை பக்தியுடன் தான் பார்க்க வேண்டுமா? வரிகளை ரசிக்கக் கூடாதா? இந்த மாதிரி ஏன் வேறு யாராலும் எழுத முடியவில்லை என்று ஆதங்கப்படக்கூடாதா? இதிலுள்ள பாலியல் சார்ந்த உளக்கிளர்ச்சியைச் சுட்டிக்காட்டினால் பாவமாகிவிடுமா? இல்லை பாவமே என்று அவளேதான் சர்டிபிகேட் கொடுத்துவிடுகிறாளே.

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்து

சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே

காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்

ஏமத்தோர் தென்றலுக்கிங்கு இலக்காய் நான் இருப்பேனே

என்ற வரியில் எனக்கு கண்ணன், ஆண்டாள், நாயக நாயகி பாவம், யோகம், இரண்டறக் கலத்தல் இன்னபிற அனைத்தும் அழிந்துவிடுகிறது. காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்ட ஒரு பெண் தன் உள்ளத்தை ஒளிக்காமல் வெளியிடும் துணிச்சலை வியக்கத் தோன்றவில்லை? அவளது எண்ணம், எத்தனை அற்புதமாகச் சொற்களுக்குள் தன்னைச் சொருகிக்கொண்டு வெளியே வருகிறது என்று வாய்பிளக்கத் தோன்றவில்லை? இப்படி ஒருத்தி எழுதியிருக்கிறாள், முடிந்தால் யாராவது முயற்சி செய்து பாருங்கள் என்று சொன்னால் அது ஆண்டாளை போர்னோகிராபி ரைட்டராக்குவதாகுமா? அரவிந்தன் மன்னிக்கவேண்டும், எழுத்தை எனக்கு எழுத்தாக மட்டுமே பார்க்கத் தெரியும். ஹிந்துத்வ கலர் கண்ணாடி எனக்கு அவசியமில்லை. [ஏற்கெனவே சோடாபுட்டி. மைனஸ் மூணு.]

‘ஆர்க்கும் என் நோய் இது அறியலாகா – கார்க்கடல் வண்ணன் கைகண்ட யோகம் தடவத் தீரும்’ என்கிற ஆண்டாளுக்கே இம்மாதிரியான மனத்தடைகள் எதுவும் இல்லாதபோது தமிழ் ஹிந்துவுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது என்பதுதான் புரியவில்லை.

பி.கு 1: இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் சில பாடல் வரிகள் எங்கெங்கே வருகிறது என்று சட்டென்று என்னால் சரியாகச் சொல்ல இயலாது.  ஆனால் கண்டிப்பாக ஆண்டாள் எழுதியவைதான். சந்தேகமில்லை. மிகச்சிறு வயதில், காஞ்சீபுரத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஆதரவில் நடந்த ஒரு பாடசாலையில் சில காலம் படித்தேன். அப்போது அர்த்தமெல்லாம் தெரியாமல் ஒவ்வொரு வரியையும் ஆசிரியர் சொல்ல, திரும்ப மூன்று மூன்று முறை சொல்லி உருப்போட்டேன். அர்த்தம் இழந்து அவை மனத்துக்குள் தங்கிவிட்டன. மிகப்பல ஆண்டுகள் கழித்து – எழுத ஆரம்பித்த பிறகே ஆண்டாளும் இன்னபிறரும் அர்த்தமுடன் ஜீரணமானார்கள். இப்போது அரவிந்தனுக்காகச் சில வரிகளை மீளோட்டம் செய்து பார்த்து பொருத்தமான சிலவற்றை மட்டும் மேலே தந்திருக்கிறேன். சில சொற்களில் – பதப்பிரிப்பில் பிழைகளும் வந்திருக்கலாம். மன்னிக்கவும். புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால் கண்டிப்பாக எந்தப் பாசுரம், எண் என்றெல்லாம் அடைப்புக்குறிகளுக்குள் தந்துவிடலாம். சோம்பல் தடுக்கிறது. ஆண்டாளிடம் இன்னும் ரசமான வரிகள் பல உண்டு. அவளை சற்றே ஆசுவாசமாக நினைவுகூர ஒரு வாய்ப்பளித்த அரவிந்தன் நீலகண்டனுக்கு நன்றி.

பி.கு. 2: //அவ்லானின் தெரசாவும் அரேபியாவின் ரபியாவும் யூதத்தின் உன்னதபாடல்களும் வெறும் ஃபோர்னோகிராபி அல்லது திறமையான கவித்துவமான ஃபோர்னோகிராபி எனலாமா? பருவத்தின் காம எழுச்சிக்கும் வயோதிகத்தின் காம ஏக்கத்துக்குமான வடிகால் எனலாமா? பாஸ்ரா பட்டணத்து ரபியாவின் பாடல்களில் எழும் வேட்கையை அராபிய எழுத்தாளன் எவனாவது ஃபோர்னோகிராஃபி என சொல்வானா? அல்லது அந்த தரத்தில் நான் ஃபோர்ன் எழுத இறைவன் அருள் தர வேண்டும் என சொல்வானா?// என்று அரவிந்தன் தனது கட்டுரையில் கேட்டிருக்கிறார். இவை நான் இதுவரை வாசித்தறியாதவை. எனவே வாசித்துவிட்டு பதில் சொல்லுகிறேன். புதிதாகப் படிக்கச் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியமைக்குத் திரும்பவும் நன்றி.

Share

51 comments

  • பாவம் சாரே நீங்கள்!

    தலைப்பை “பாராவுக்கு வந்த சோதனை” ந்னு மாத்திப்போட்டு அக்குஜலகலகாம்பாள் ஸ்லோகத்தை 108தடவை பாராயணம் செய்யக்கடவது!

  • முதலிலே சொல்லிவிடுகிறேன். எழுத்து சுதந்திரத்தில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு.

    //நல்ல porn எழுத்து தமிழில் அநேகமாகக் கிடையாது. சில சங்கப்பாடல்களிலும் ஆண்டாளின் சில வரிகளிலும் அழகான படுக்கையறைக் காட்சிகள் இருக்கின்றன. குத்துவிளக்கெரிய எனத் தொடங்கும் திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரத்தை சொல் சொல்லாக கவனித்து வாசித்துப் பாருங்கள். அது கொடுக்கும் அனுபவத்தை எந்தக் காமக் கதாசிரியரும் இதுகாறும் தந்ததில்லை என்று அடித்துச் சொல்வேன்.

    ஆண்டாள் தரத்தில் எழுத எனக்கு எம்பெருமான் அருள் புரிந்தால் அவசியம் இந்தத் தளத்தில் சில நல்ல porn கதைகள் அல்லது கவிதைகள் எழுதிப் போடுகிறேன். //

    இதையும் படித்துவிட்டு

    //ஆண்டாளை போர்னோகிராபி எழுதும் எழுத்தாளர் என்று நான் எங்கே சொன்னேன்? இது அபாண்டமல்லவா? //

    இதையும் படித்துப் பார்த்தால், ஏதோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையாகத் தெரிகிறது.

    இதில் பிரச்சினை என்னவென்றால், உங்களை குருவாகக் கொண்டு ஒரு கூட்டமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதிவிட்டு தடாலடியாக மறுத்து எழுதுவதை எப்படிக் கொள்வது என்று தெரியவில்லை. 🙂

    ஆண்டாளோடு ஏன் நிறுத்திவிட்டீர்கள்? ஜெயதேவரின் அஷ்டபதி, ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியையும் சேர்த்து இரண்டு பக்கமும் பின்னடித்து புத்தகம் போடும் திட்டம் ஏதும் இருக்கிறதா? :))

  • அருமை பாரா! எழுத்தை எழுத்தாக மட்டும் பார்ப்பது என்னும் உங்கள்கொள்கையின் விளைவாகதான் இத்தனை அழகான ஆண்டாள் பாசுரங்கள் இணையத்துக்கு வந்திருக்கிறது. அழகான வாதங்கள். வாழ்த்துக்கள்

  • அன்புள்ள பா.இராகவன்,

    வணக்கம். தங்கள் பதிலுக்கு நன்றி. நான் ஏன் உங்களை பெரிய ஆளாக்க வேண்டும்? நீங்கள் ஏற்கனவே முக்கியமான வணிக எழுத்தாளர்தான். உங்களுக்கு புதிதாக நான் ஒன்றும் கீர்த்தியை கொடுத்துவிட முடியாது. தமிழ் ஹிந்து கட்டுரைக்கு ஒரு தனி எதிர்வினை பதிவு செய்தமைக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். அப்புறம் ஃபோர்ன் விஷயம். நான் ஒன்றும் ஃபோர்னை பஞ்சமகாபாதகமாக பார்க்கவில்லை. அது ஒரு இயல்பான விளைவு – பாலியல் பாவமாக பார்க்கப்படும் எந்த சமுதாயத்திலும் பாலியல் அடக்குத்தன்மைக்கு நேர்மறையாக எழும்பக்கூடியது அது. இங்கு பிரச்சனை ஃபோர்ன் தவறு என்பதல்ல. அது என் நிலைபாடும் அல்ல. ஆண்டாள் பக்தையா படைப்பாளியா என்பதல்ல. என்னைப் பொறுத்தவரையில் ஆண்டாளை முழுக்க முழுக்க அவளது ஆன்மிக பரிமாணங்களை அழித்துவிட்டு இலக்கிய படைப்பாளியாகவே பார்ப்பது ஆரோக்கியமான விஷயமே. என் விமர்சனம் உங்கள் பதிவு ஆண்டாளை ஒரு ஃபோர்ன் எழுத்தாளர் என்பது போல சித்தரிப்பதுதான். நீங்கள் அப்படி கருதவில்லை என்றால் எனக்கு மிகவும் சந்தோஷம். அது அபாண்டமாக இருந்தால் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சிதான். அந்த பாவம் என்னோடு போகட்டும். ஆனால் நீங்கள் எழுதியது ஆண்டாளிடமிருந்து ஃபோர்ன் எழுதுபவர்கள் படிக்கலாம். ஆண்டாளிடம் ஃபோர்னை எதிர்பார்க்கலாம் என்பதாகத்தான் பதிவாகியுள்ளது. ஆண்டாளின் கவித்துவம் என்பதையே எடுத்துக்கொள்வோம் ….எத்தனையோ தலைவி-தலைவன் விரகபாவ இலக்கியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஆண்டாளுக்கு என்ன முக்கியத்துவம்? காமத்தின் எழுச்சியையும் ஆழத்தையும் அதன் முழு உக்கிரத்துடன் காட்டி அதனை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச்செல்வது. இதுவும் ஆண்டாளின் படைப்பாளி பரிமாணத்துடன் சேர்ந்ததுதான். இன்னும் சொன்னால் ஆண்டாளின் படைப்பாளி பரிமாணத்தின் மைய அச்சும் கூட.

    //ஆண்டாள், கடவுளைக் காதலித்தாள் என்பதனாலேயே அவளது படுக்கையறை விவரிப்புகள் வரும்போது கண்மூடி, கைகூப்பிக்கொண்டுவிட வேண்டுமா? என்னால் முடியாது! அவரைப் பிராயம் தொடங்கி ஆதரித்து எழுந்த தன்னுடைய தடமுலைகள் துவரைப் பிரானுக்கே என்று அவள் டிக்ளேர் செய்யும்போது எனக்கு விசிலடிக்கத் தோன்றினால் அரவிந்தனுக்கு ஏன் கோபம் வருகிறது?//

    Àடுக்கையறை விவரிப்புகள் வரும் போது கைகூப்புங்கள் என்றோ கண்மூடுங்கள் என்றோ சொல்லவில்லை. நீங்கள் விசிலடிப்பதோ இன்னபிற செய்வதோ உங்கள் சுதந்திரம். உங்கள் மனவிகாரங்களை கட்டுப்படுத்த நான் யார்? ஆனால் ஃபோர்ன்கிராபிஸ்ட் எழுதுவது எதற்காக? மனிதனின் மலின இச்சைகளில் காசு சம்பாதிப்பதற்காக. ஆண்டால் செய்வதோ எது மலினமாக பார்க்கப்படுகிறதோ அதனையே ஓர் உன்னதமாக்குவது. இவை இரண்டுக்குமான வேறுபாட்டை ஆரம்ப நிலை வாசகனுக்கு உணர்த்த வேண்டிய நீங்கள் அல்லது “ஆண்டாளின் இலக்கியம் ஆபாச உடல் வர்ணிப்பு” என்கிற ரீதியில் தமிழ்நாட்டில் செய்யப்படும் பிரச்சாரத்தால் குழம்பிப் போன ஒருவனுக்கு உண்மையை உணர்த்த வேண்டியது கடமையாக இல்லாவிட்டாலும் அதற்கான புரிதலும் திறமும் உடைய நீங்கள் அதற்கு நேர் எதிராக ஒரு தவறினை செய்கிறீர்கள் என்பது என் அபிப்பிராயம்.

    //‘ஆண்டாளின் பாசுரங்களில் தத்துவார்த்த குறியீடாக மாற்றுவதற்கு அப்பால், ஆண்டாள் கோபிகைகளின் உணர்ச்சிகளை தனதாக மாற்றினாள். அதன் மூலம் இறையுடன் கலந்தாள்.’ என்று அரவிந்தன் சொல்கிறார். மிகவும் சரி. சினிமா ஹீரோவின் சாகசங்களை லயித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தானே செய்ததுபோல் மனத்துக்குள் கற்பனை செய்து மகிழும் எளிய பாமர உணர்வின் வெளிப்பாடல்லவா இது? ஆண்டாளின் ஹீரோ கண்ணன் என்பதால் மட்டும் ஃபார்முலா மாறிவிடுமா?//
    முடியலை…உண்மையிலேயே இதுக்கு பதில் சொல்ல முடியலை…உளறல்களில் மகா உளறல் இது. சாதாரண மனிதனால் முடியாத இந்த தெய்வீக உளறலுக்கு மாவா காரணமெனில் அதற்கு என் வந்தனங்கள். இதுதான் உங்கள் இலக்கிய புரிதல் என்றால் ….

    முடிவாக, ஆண்டாளை இலக்கிய படைப்பாளியாக பார்க்க வேண்டும் என்பது இன்று புதிதாக வந்த குரலல்ல. எனக்கு தெரிந்து 1950களிலிருந்தே அத்தகைய பார்வைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. (அதற்கு முன்னரும் கூட வந்திருக்கலாம்) ஆனால் அதற்கும் கூலிப்பாட்டெழுதும் அதிகார புகழ்பாடி வாலியுடனும் வைரமுத்துக்களுடனும் “திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்” என திரைப்பட பாட்டெழுதிகள் வரிசையில் ஆண்டாள் பெயரை போடும் அபத்தத்துக்கு அதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆண்டாள் பல தளங்களில் வாசிக்கப்பட வேண்டியவள். அத்வைத பக்தி, பெண் உடலின் முழுமையைக் கொண்டாடுதல் முதல் அடக்கப்பட்ட பெண்ணிய ஆன்மிகம் வரை பல தளங்களில். ஆனால் அரிப்பெடுக்கும் மலின தளங்களுக்கு நம்முடைய தராதரத்தால் அவளை குறுக்க வேண்டாமே அதுவும் இன்று ஊடக வீதியெங்கும் சாக்கடைகள் அதிகார நீரூற்றாய் பெருக்கெடுத்து ஓடும் போது.

    நன்றியுடன்
    அரவிந்தன் நீலகண்டன்.

    • அன்புள்ள அரவிந்தன், உங்கள் பதில் வாதங்களுக்குள் நுழையும் முன்னால் – கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்ள அவகாசம் கொடுங்கள் – ஒரே ஒரு வேண்டுகோள். நான் இருப்பவனாக இருக்க விரும்புகிறேன். என்னை ‘இரா’கவனாக்கிக்கொண்டே இருக்காதீர்கள்! 😉

  • அன்புள்ள பாரா,

    இன்று காலை இவன்சிவனின் குறும்பதிவுகள் துயிலெழுப்பின. அவற்றைப் படித்த பின்னர் தான் உங்கள் மூலப் பதிவையும் விளக்கப் பதிவையும் படித்தேன். அவற்றைப் படிப்பதற்கு முன் இவ்விஷயத்தில் முக்கால்வாசி நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கும் என்ற தோராயமான முன்தீர்மானம் கொண்டிருந்தேன் (இவன்சிவன் மன்னிக்க). ஆனால் பதிவுகளைப் படித்த பின் இவன்சிவனின் ஆட்சேபங்கள் நியாயமானவைதான் என்று நினைக்கிறேன்.

    அடிப்படையில் இவ்விஷயத்தில் உங்கள் பார்வை வேறு, உங்கள் ஒப்பீட்டினை எதிர்ப்பவர்களது பார்வை வேறு என்பது திண்ணம். உங்களைப் போல், ஆண்டாளின் பாசுரங்களை “வெறும்” இலக்கியமாகப் பார்க்கும் போது, அதிலிருக்கும் காமம் கலந்த வரிகள் கிளர்ச்சி ஊட்டக் கூடியதாகத் தோன்றலாம். ஆனால், அவற்றை பக்தி இலைக்கியமாகப் பார்க்கும் போது அதே வரிகள் கிளர்ச்சியற்ற வேறொரு (“அடுத்த”?) தளத்தில் இயங்குகின்றன.

    இந்த ஒரு மற்ற பார்வை உங்களுக்குப் புரியாத/தெரியாததில்லை. அந்தப் பார்வையையும் அங்கீகரிக்கும் வண்ணம் உங்கள் பதிவில் வரிகள் இருந்தால், ஒரு முழுமை இருந்திருக்கும்.

    உங்கள் பார்வையை (perspective) மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்ற அங்கலாய்ப்பு உங்கள் விளக்கப் பதிவிலும் குறும்பதிவுகளிலும் தெரிகின்றது. மற்றவர்களின் பார்வையைப் புரிந்து கொண்டும் அங்கீகரிக்க மறுக்கிறீர்கள் என்ற வருத்தம் உங்கள் பதிவுகளைப் படித்த பின் எனக்கு இருக்கிறது.

    ஶ்ரீகாந்த்

    • அன்புள்ள அரவிந்தன், ஸ்ரீகாந்த், ஸ்ரீதர் பிற நண்பர்களுக்கு, எனக்கு என் வாதத்தை நிறுவியே தீரவேண்டுமென்கிற அடங்காக் கொந்தளிப்பெல்லாம் இல்லை. எப்போதும் அது கிடையாது. எதிராளி சரியென்றால் ஏற்பதில் எனக்கு எப்போதும் மனத்தடை இருந்ததில்லை.

      இந்த விஷயத்தில், நான் ஆண்டாளைக் கொச்சைப்படுத்துவதாகச் சொல்வதைத்தான் என்னால் ஏற்க இயலவில்லை. நான் அவளது ரசிகன். ஓர் ஆன்மிகக் கவியான ஆண்டாளின் எழுத்தில் ஆங்காங்கே அழகுற வெளிப்படும் காமம்கூட, ப்ரொஃபஷனல் ஆசாமிகளிடம் இல்லை என்பதுதான் நான் சொல்லவந்தது.

      உடனே ப்ரொஃபஷனல் செக்ஸ் ரைட்டர்ஸும் ஆண்டாளும் ஒன்றா என்று கேட்டால் நான் என்ன செய்வது? நான் ஆண்டாளுக்கு பதிலாக இன்னொரு உதாரணம் சொல்லியிருந்தால் பிரச்னை இருந்திருக்காது என்பதை அறிவேன். ஆனால் உதாரணம் காட்டுமளவுக்குக் கூட வேறு யாரும் இந்த நேர்த்தியில் எழுதியிருப்பதாக – நாறிந்தவரை – தெரியவில்லை.

      என்னுடைய முதல் கட்டுரையில் நான் குறிப்பிட்டது ஒரே ஒரு வரி. இந்த பதில் கட்டுரையில் அவளது பல பாசுரங்களிலிருந்து உதாரணங்கள் காட்டியிருக்கிறேன். சும்மா தத்துவம், பேரின்பம் என்று பேசிக்கொண்டிராமல், இந்த வரிகளில் பொதிந்து கிடக்கும் காமச் சித்திரிப்புகளை தயவுசெய்து கூர்ந்து வாசித்துப் பாருங்கள். ஆண்டாள் ஒரு சிறந்த காமச் சித்திரிப்பாளர், அவரளவு எழுத வேறு ஆள் கிடையாது என்று சொன்னதை இதற்கு எதிர்வாதம் வைத்து மறுக்க வேண்டும்.

      அதை விட்டுவிட்டு காமத்தை ஏன் பார்க்கிறாய், கடவுள் தெரியவில்லையா, தத்துவம் புரியவில்லையா என்றெல்லாம் கேட்பது திசை திருப்பலாகும்.

      ஆண்டாளின் நோக்கம் எழுத்தில் காமக் கிளர்ச்சி எழுப்புவதல்ல என்பதுகூடத் தெரியாத மூடனல்ல நான். ஆனால் இருப்பதை இருக்கிறது என்று ஒப்புக்கொள்ள எனக்கு எந்தவித மனத் தடையும் மதத்தடையும் இல்லை.

  • சொல்ல மறந்துவிட்ட சில விஷயங்கள்:
    //நீலகண்டனுக்கு நம்புவதில் என்ன பிரச்னை?/
    நம்பிக்கைகள் எனக்கு எப்போதுமே பிரச்சனைதான் ஆசானே…
    //இப்படி ஒருத்தி எழுதியிருக்கிறாள், முடிந்தால் யாராவது முயற்சி செய்து பாருங்கள் என்று சொன்னால் அது ஆண்டாளை போர்னோகிராபி ரைட்டராக்குவதாகுமா? அரவிந்தன் மன்னிக்கவேண்டும், எழுத்தை எனக்கு எழுத்தாக மட்டுமே பார்க்கத் தெரியும். ஹிந்துத்வ கலர் கண்ணாடி எனக்கு அவசியமில்லை. [ஏற்கெனவே சோடாபுட்டி. மைனஸ் மூணு.] ‘ஆர்க்கும் என் நோய் இது அறியலாகா – கார்க்கடல் வண்ணன் கைகண்ட யோகம் தடவத் தீரும்’ என்கிற ஆண்டாளுக்கே இம்மாதிரியான மனத்தடைகள் எதுவும் இல்லாதபோது தமிழ் ஹிந்துவுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது என்பதுதான் புரியவில்லை.//

    அந்த “யாராவது” யார்? யாரிடம் சொல்கிறீர்கள் ஃபோர்னோகிராபி எழுத்தர்களிடம்தானே…அப்போது ஆண்டாளை எந்த எழுத்தின் முன்னோடியாக பார்க்கிறீர்கள்…உங்களை ஹிந்துத்துவ கண்ணாடி போடவும் சொல்லவில்லை. சோடாபுட்டியை கழற்றவும் சொல்லவில்லை. (ஹிந்துத்துவம் ஒன்றும் மார்க்ஸியம் போல கண்ணாடி அல்ல. அது ஒரு ஜீவ சத்தியம். எந்த பண்பாட்டு வளிமண்டலத்தில் உங்கள் ஜீவிதமும் சுதந்திரமும் சாத்தியமாகிறதோ அது.) நான் சொல்ல விரும்பவதெல்லாம் ஒளிவட்ட ஆசையில் அபத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். மற்றபடி மனத்தடைகள் ஆண்டாளுக்கும் இல்லை தமிழ் ஹிந்துவுக்கும் இல்லை. எனது எதிர்வினையை தமிழ்ஹிந்து வெளியிட்டதே ஒழிய தமிழ்ஹிந்து உங்களை எதிர்க்கவில்லை.

    ஓணம் நல்வாழ்த்துக்கள்.

  • மடல் என்று ஒரு சிற்றிலக்கிய வகை உண்டு. வருணகுலாதித்தன் மடல் என்று அந்தவகை நூலை நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் வாசித்ததுண்டு. அற்புதமான காமச்சுவை ததும்பும் நூல். இப்பொழுது தேடிப் பார்க்கின்றேன். எங்கும் கிடைக்கவில்லை. இந்தநூலைத் தமிழறிஞர் திருச்சிற்றம்பலம் மு.அருணாசலம் அவர்கள் பதிப்பித்ததாக நினவு. தவறாகவும் இருக்கலாம்.இதுவும் பெண் பாடியதாகக் கூறப்படுகிறது. இராகவன் அவர்கள் இந்நூலைச் சென்னையில் தேடிப்பார்த்து வெளிப்படுத்த வேண்டுகின்றேன்.

  • //ஆண்டாள் ஒரு சிறந்த காமச் சித்திரிப்பாளர், அவரளவு எழுத வேறு ஆள் கிடையாது என்று சொன்னதை இதற்கு எதிர்வாதம் வைத்து மறுக்க வேண்டும்.//
    ஏன் மறுக்க வேண்டும்? காமத்தை சித்தரிப்பது தவறென்று எங்கே சொன்னேன்? அல்லது அதற்கு கண் மூட வேண்டுமென்று? இதுதான் சாமர்த்தியமாக திரிக்கும் வேலை என்பது. உலகில் பெண்களையெல்லாம் பர்தா போடுகிற பெண்கள் அல்லது திறந்து காட்டுகிற பெண்கள் என்று வகைப்படுத்திவிட்டு சூஃபியிசம் பேசுகிற பேராசிரியர்களுக்கு காமச்சித்தரிப்பு தவறாக இருக்கலாம். எனக்கல்ல. நான் ஆட்சேபிப்பது ஃபோர்ன் எழுத்தர்களை விளித்து அல்லது காமக்கதைகள் நாடி உங்களைத் தேடியவர்களை விளித்து ஆண்டாளிடம் போ என்று சொல்லுகிற அபத்தத்தைத்தான்.

    • // நான் ஆட்சேபிப்பது ஃபோர்ன் எழுத்தர்களை விளித்து அல்லது காமக்கதைகள் நாடி உங்களைத் தேடியவர்களை விளித்து ஆண்டாளிடம் போ என்று சொல்லுகிற அபத்தத்தைத்தான்.//

      அடக்கடவுளே, நல்லகாரியம் செய்தால் தப்பா? அல்லது மக்கள் திருந்தவே கூடாது என்பது உங்கள் கருத்தா? அப்படியாயின் நான் சொன்னது அபத்தமாகவே இருக்கக் கடவது.

  • மக்களை திருத்துறதுக்குன்னு அதை எழுதினீங்களா….அடடே தெரியாம போச்சு…அடிச்சு ஆடுங்கண்ணா…புல்லரிக்குது…எப்படீங்கண்ணா உங்களால மட்டும் இது முடியுது…

    • அரவிந்தன், இது அலகிலா விளையாட்டு 😉 அடித்து ஆட நீர் தயாரென்றால் நானும். ஆனால் அடிப்படையிலிருந்து மாறக்கூடாது! ஆண்டாள் மிகச் சிறப்பாகப் பாலியல் எழுத்தைத் தந்திருக்கிறாள் என்று நான் சொன்னேன். அவளை எப்படிப் பிறருடன் ஒப்பிடலாம் என்றீர்கள். சிறந்ததைச் சொல்லித்தான் மட்டமானதை இனம் காண முடியும். நீங்கள் அறியாததல்ல. போர்ன் எழுத்தைத் தேடுபவர்களை ஆண்டாளிடம் போ என்று சொல்வதை அபத்தம் என்றீர்கள். நான் செய்தது நல்லகாரியமல்லவா என்றேன். உடனே மக்களைத் திருத்த எழுதினேனா என்கிறீர்கள். இது அரசியலாக்கம். நான் தற்செயலாகக் குறிப்பிட்ட ஓர் உதாரணம் நல்ல காரியமாவதை நீங்களே சுட்டிக்காட்டிவிட்டு, ஆமோதித்தால் உடனே அடித்து ஆடச் சொல்வது போங்காட்டம். 😉

  • Anbulla Para…I don know how to type in Tamil..u never published my comment on ur site….i don know why…ATHU NIRKA..

    i am not seeing anything wrong that u wrote…I am seeing this as jumping in the LIMELIGHT for the people who watching you…..

    • //u never published my comment //

      இந்தத் தளத்தில் யாருடைய கருத்துகளும் பிரசுரிக்கப்படாமல் இருந்ததில்லை. மிகக் கேவலமான ஆபாச மொழி வசவுகளும் வேண்டாத அக்கப்போர்களும் மட்டுமே நீக்கப்படும்.

  • நான்: ஆண்டாள் நல்லவளா கெட்டவளா?

    பாரா: தெரியலையேப்பா…

    டிண்டிண்டிண்டிண்டிடின் டொடடய்ங்…

    • பிரசன்னா, ஆண்டாள் நல்லவளோ கெட்டவளோ தெரியாது. ஆனால் நீர் நல்லவரில்லை. அது நன்றாகத் தெரியும்.

  • பாரா… எனக்கென்னமோ நீங்கள் முதல் கட்டுரையில் porn என்ற சொல்லுக்கு பதில் erotic என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தீர்கள் என்றால் விவாதம் வேறு தளத்துக்கு போயிருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில் விவாதம் porn மலினமானது, அங்கு ஏன் ஆண்டாளை அழைத்துச்செல்ல வேண்டும் என்ற திசையிலேயே பயணிக்கிறது. erotic என்றால் அதில் ஒரு class வந்து சேர்ந்து விடுகிறது, அல்லவா?;)

    ஆண்டாளை ஒரு வாசகனாக மட்டுமே பார்த்தால் ஒரு அனுக்கம் தோன்றுமே… என் தோழி இவள் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளாம் போல. அங்கிருந்து ஆண்டாளை பார்த்தால் கண்ணன், கோபியர், நப்பின்னை, வடமதுரை எல்லாம் வெறும் fillers மட்டுமே என்று கூட தோன்றலாம். அந்த அன்பு மட்டுமே பிரதானம். அதுவே காதலாக காமமாக கோவமாக விரக்தியாக புலம்பலாக மீண்டும் மீண்டும் வருகிறது ஆண்டாள் பாடல்களில். அந்த அன்பு போய் சேரும் இடம் மட்டுமே அந்த கண்ணன். என் வாசிப்பில் ஆண்டாள் பாடல்களில் கண்ணன் அல்ல கதாநாயகன்.. ஆண்டாளின் காதலே.

    • சித்தார்த்! நீங்கள் சொல்வது சரி. பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தபோதும் கிட்டத்தட்ட இதே மாதிரி சொன்னார். பிரச்னை அது போர்னா எரோடிக்கா என்பதில்லை. போர்ன் என்கிற சொல்லுக்கு இவர்கள் கொள்ளும் நேரடித் தமிழ் அர்த்தம் ஆபாசம் என்பது. அது முதல் தவறு. போர்ன் என்பதைப் பாலியல் எழுத்து என்றுதான் சொல்லவேண்டும். ஆபாசம் என்பது பாலியல் எழுத்தில் மட்டுமா உள்ளது? அரசியல் தொடங்கி அனைத்துத் தளங்களிலும் அங்கிங்கெனாதபடி உள்ளது அது. இந்தத் தவறான சொற்புரிதலால் ஆண்டாள் – போர்ன் என்றதுமே ஆண்டாளை ஆபாச எழுத்தாளர் லிஸ்டில் சேர்க்கிறாயா என்று கச்சை கட்டிக்கொண்டுவிடுகிறார்கள். காமம் கடந்து ஆண்டாளிடம் விவாதிக்க ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு. என்ன செய்ய? அரவிந்தன் நீலகண்டன் இதைவிட்டு நகர விடமாட்டார் போலிருக்கிறதே! 😉

  • //நான்: ஆண்டாள் நல்லவளா கெட்டவளா?

    பாரா: தெரியலையேப்பா…

    டிண்டிண்டிண்டிண்டிடின் டொடடய்ங்…//

    :)))))))))))))))))))))))

  • Anbulla para…u r the writer I admire and enjoy…couple of times I posted my comments…somehow it might have missed…or might be my mistake…..

    I sent you the prologue of my story..I was eagerly waiting for ur comments..Still I am waiting for that…Please leave some minutes for that amidst ur schedule… whatever the comments u give i ll take it and improve or change or whatever…WAITING …

    its just a small wish of ur boy….

  • எழுதாததும் சுகமென இருந்த பாராவை இப்பொழுது இரவிலும் தூங்க விடாத ஆண்டாள் வாழ்க 🙂

  • உண்மையிலேயே இவ்வளவுதூரம் ஞானத்தேடல் நிறைந்தவர் பாரா என்பது தெரியாமல் போயிற்று.. இதர மார்க்கங்களிலும் உள்ள நல்ல போர்னோகிராபி எழுத்தாளர்களையும், எழுத்துக்களையும் தேடிப்பிடித்து எழுதி எங்களை உய்விக்கவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

    ஜெயக்குமார்

  • //பிரசன்னா, ஆண்டாள் நல்லவளோ கெட்டவளோ தெரியாது. ஆனால் நீர் நல்லவரில்லை. அது நன்றாகத் தெரியும்.//

    அகம் பிரம்மாஸ்மி.

  • கலகம் பிறந்தால் நாலு பதிவு கூட வருது. ஐயா ஜாலி.

  • //பிரச்னை அது போர்னா எரோடிக்கா என்பதில்லை. போர்ன் என்கிற சொல்லுக்கு இவர்கள் கொள்ளும் நேரடித் தமிழ் அர்த்தம் ஆபாசம் என்பது. அது முதல் தவறு.//
    உங்களுக்கு தெரிகிறது அண்ணாத்தே ஆனால் பாருங்க இந்த டிக்ஷனரி காரன் இந்துத்துவா கண்ணாடி போட்டுக்கொண்டல்லவா பார்த்திருக்கிறான் : “creative activity (writing or pictures or films etc.) of no literary or artistic value other than to stimulate sexual desire” விக்கிபீடியாவில் இது குறித்து எழுதியிருக்கிற பாசிச படுபாவி “Pornography or porn is the depiction of explicit sexual subject matter for the purposes of sexual excitement.” என்று சொல்லுகிறான். Pornography இன் வேர்சொற்களை தேடினால் அதே விக்கிபீடியா மடத்தடியன் “pornographi, which derives from the Greek words porne: “prostitute” & pornea, “prostitution”), and grapho, “I write or record,” derived meaning “illustration,” என்று எழுதியிருக்கிறான். இந்த மாதிரி அரைகுறைகளையெல்லாம் திருந்த செய்ய அய்யன்மீர் அவதாரம் எடுத்து வந்திருக்கிறீர்கள் என்பதை அறியாமல் பாவி அபச்சாரமாக பேசிவிட்டேன். விபச்சார எழுத்து குறித்து விரிவுரைத்த வித்தகரே வாழ்க நும் தமிழ் தொண்டு. “பாலியல் எழுத்து என்பது வேறு பாலியல் உணர்ச்சிகளை தூண்டுவதற்கு மட்டுமே எழுதப்படும் எழுத்து என்பது வேறு. பாலியல் அனுபவத்தை அல்லது காம உணர்ச்சிகளை அழகுடன் உரைத்து அதனை மேலும் விரிவடைய படிக்கட்டாக்குவது வேறு எதிலும் ‘அதைக்’ கண்டு கிளர்ச்சி அடைவது வேறு.” என்றெல்லாம் இந்துத்துவ தடிக்கழுதைகள் கத்தலாம். நீவிர் தளர்ந்திடலாகாது. (இந்த தளர்ச்சிக்கும் வேற மீனிங் எடுத்துறாதீங்கையா)

  • Following up to Aravindan’s multiple definition, here is how the US Supreme court, after several years of serious debate, defined pornography:

    “(a) whether the ‘average person, applying contemporary community standards’ would find that the work, taken as a whole, appeals to the prurient interest,

    (b) whether the work depicts or describes, in a patently offensive way, sexual conduct specifically defined by the applicable state law, and

    (c) whether the work, taken as a whole, lacks serious literary, artistic, political, or scientific value.”

    The most relevant part for this discussion is (c) above. I don’t think anyone would dispute the serious literary or artistic value of Andal’s works.

    So, PaRa, it is patently clear that it is your understanding of the word “Pornography” that is flawed. In this case, you have clearly misapplied it when you characterised Andal’s work as such.

    Srikanth

  • //போர்ன் எழுத்தைத் தேடுபவர்களை ஆண்டாளிடம் போ என்று சொல்வதை அபத்தம் என்றீர்கள். நான் செய்தது நல்லகாரியமல்லவா என்றேன். //

    போர்ன் எழுத்தைத் தேடுபவர்களை ஆண்டாளிடம் அனுப்புவது நல்ல காரியமா? ஏன்? போர்ன் எழுத்தைத் தேடுவது கெட்ட காரியமா?

    போர்ன் எழுத்தைத் தேடுபவர்கள் அதைச் சென்றடையட்டும். ஆண்டாளைத் தேடுபவர்கள் அங்கு செல்லட்டும்.

    இருவரையும் அவரவர் போக்கில் விட்டால் புண்ணியமாய்ப் போகும்.

  • //நான் ஆண்டாளுக்கு பதிலாக இன்னொரு உதாரணம் சொல்லியிருந்தால் பிரச்னை இருந்திருக்காது என்பதை அறிவேன். ஆனால் உதாரணம் காட்டுமளவுக்குக் கூட வேறு யாரும் இந்த நேர்த்தியில் எழுதியிருப்பதாக – நாறிந்தவரை – தெரியவில்லை. //

    அய்யா, ஏன் இல்லை? இருக்கிறது. இதற்காக ஆப்ரிக்காவிற்கும், அரேபியாவிற்கும் எல்லாம் போக வேண்டாம்.

    கீழ்கண்ட பாடல்களை நீர் படித்திருப்பீர் என்றே நம்புகிறேன்.

    கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
    நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
    எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
    பசலை உணீஇயர் வேண்டும்
    திதலை அல்குல் என் மாமைக் கவினே

    இதில் ஏதும் கவித்துவம் இல்லையோ? எழுதியது ஒரு பெண். வெள்ளிவீதியார். குறுந்தொகையில் வருகிறது. எளிமையாகப் பொருள் தெரியும் விதத்தில் தானே இருக்கிறது.

    முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
    பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
    வருகுவை ஆயின் தருகுவென் பால்” என
    விலங்க அமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
    திதலை அல்குல் எம் காதலி
    புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே

    – இந்த சங்கப்பாடலுக்கும் பொருள் கூறாமலே விளங்குமே!

    “வாடுமுலை ஊறிச் சுரந்தன” – இது சங்க கால ஔவை வாக்கு.

    “முட்டு வென்கொல் தாக்கு வென்கொல்” – இதுவும் ஔவை வாக்கே!

    வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை- நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட – நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி – வேதப் பரிபுரையே”

    – இது அபிராமிப்பட்டர் வாக்கு. அம்பாளை இவ்வாறு பாடியிருக்கிறார். சங்கரர் வர்ணித்திருக்கிறார். இன்னும் நிறையப் பாடல்கள் இது போன்று இருக்கின்றன. ஆக
    இன்று ‘ஆபாசம்’ என்று கூறப்படும் சொற்கள் அல்லது வார்த்தைகள் அன்று ஆபாசமாகக் கருதப்படவில்லை. அது தவறான பொருளில் எடுத்தாளப்படவில்லை. ஆனால் இன்று அதைப் பற்றி விவரித்தால் அது தவறாகப்படுகிறது.

    பாரா சொன்னதில் தவறில்லை. ஆனால் சொன்ன விதத்தில்தான் தவறு. அதை மேலும் மேலும் விளக்கி சிக்கல் நூலாம்படையாகி விட்டது. ஒட்டடை அடித்து விடுங்கள். எல்லாம் சரியாகி விடும்.

  • அன்புள்ள பா.ரா,

    நீங்கள் ஒரு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே ஆண்டாளைக் கருதியிருந்தால், ஒப்பீட்டுக்கு தி.ஜா, லா.ச.ரா, கிருத்திகா, அம்பை என்றெல்லாம் போயிருக்கலாம் அல்லவா? இவர்களும் பாலியல், பெண் காமம் எல்லாம் எழுதியவர்கள் தானே? ஆனால் ஒரு discerning இலக்கியத் தராதர பார்வை இல்லாமல் முட்டாள்தனமாக வேண்டாத இடத்தில் ஆண்டாளை இழுத்து எழுதி மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

    நாச்சியார் திருமொழியில் இருந்து (அதன் பெயரைக் கூட சொல்லத் தயங்கி, எப்போதோ கேட்டது, படித்து என்று hypocricy தனம் கலந்த மழுப்பலுடன்) பாடல்களை இங்கு இட்டிருக்கிறீரகள். இந்தப் பாடல் –

    வானிடை வாழும் அவ்வானவர்க்கு என்று
    மறையவர் வேள்வியில் வகுத்த அவி
    *கானிடை மேய்வதோர் நரி புகுந்து
    கலப்பதும் மோப்பதும் செய்வதென்ன*
    ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று
    உன்னித்தெழுந்த என் தடமுலைகள்
    மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
    வாழகில்லேன் கண்டாய் மன்மதனே.

    தன் அனுபவம், தன் படைப்பு, தன் வெளிப்பாடுகள் கொச்சைப் படுத்தப் படக் கூடாது என்று ஆண்டாளே இதில் சொல்லியிருக்கிறாள். ஏனென்றால் அவள் வாழ்ந்த கலாசாரத்தில், பண்பாட்டுத் தொடர்ச்சியில், அது கொச்சைப் படுத்தப் படாது என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது. பராசர பட்டரும், ராமானுஜரும் போன்ற ஞானிகள், மகா ரசிகர்கள் அவளைப் போற்றுவார்கள் என்று கூட காலத்தை வென்ற அவள் கவி மனம் அறிந்திருந்ததோ? இருக்கலாம்.

  • // பாரா சொன்னதில் தவறில்லை. ஆனால் சொன்ன விதத்தில்தான் தவறு. //

    இதன் பொருள் ஆண்டாளைப் பற்றி நீங்கள் கூறியது தவறில்லை என்பதாகாது. ஆண்டாளைப் போல நானும் எழுதுவேன் என்று நீங்கள் கூறியதில் தான் தவறில்லை என்கிறேன். அதற்காக ஆண்டாளின் இலக்கியத்தை மூன்றாம் தர போர்னோ எழுத்துக்களுடன் ஒப்பிட்டிருப்பது கண்டிப்பாக தவறுதான், நீங்கள் எத்தனை சமாதானம் கூறினாலும் அது கண்டிக்கத்தக்கதே!

  • தூங்கி எழுந்து பார்ப்பதற்குள் நிறைய விவாதங்கள் நடந்துவிட்டன.

    //பாரா சொன்னதில் தவறில்லை. ஆனால் சொன்ன விதத்தில்தான் தவறு. அதை மேலும் மேலும் விளக்கி சிக்கல் நூலாம்படையாகி விட்டது.//

    சரி தவறு என்பதற்குள் எல்லாம் போகவில்லை. என்ன சொல்கிறார் என்று சரியாகப் புரிந்து கொள்ளவே கொஞ்சம் ஊன்றி படிக்க வேண்டியிருக்கிறது. சித்தார்த் சொன்னது போல erotic, porn வித்தியாசத்தை படிக்கிறவர்கள் தலை மேல் போட்டுவிட்டுப் போகலாம்தான். நமக்கு தெரிந்த விஷயம்தானே எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற அலட்சியம்தான் பெரிதும் தெரிகிறது. இருந்துவிட்டுப் போகட்டும்.

    ஆனால் திருவாசகத்தை நான் கவிதையாக பார்ப்பேன். பிரபந்தத்தை சத்தியமாக நம்புகிறேன் என்று மாற்றிப் போட்டுப் பேசும்போது என்னதான்யா சொல்ல வர்றார்னு கேள்வி எழுகிறது.

    சரி. இப்படி வைத்துக் கொள்வோம். ’அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன்’ என்ற சினிமா பாட்டை கேட்கிறோம். தனது காதலியை அம்பாளாக பார்த்து பாடுகிறான் நாயகன். அந்த பாட்டை எடுத்துக் கொண்டு கோவில் அர்ச்சகரிடம் ‘இந்த பாட்டை விட கிளுகிளுப்பாக என்னய்யா இருக்கிறது? சிலையை சிலையாக பார்க்காமல் ஏன் அம்பாளாக பார்க்கிறீர்?’ என்று கேள்விக் கேட்கலாம். அதையும் தாண்டி சிலவற்றை ஒப்பிட்டு எந்த சிலை கிக்காக இருக்கிறது என்றும் விளக்கம் எழுதலாம். தவறாக எண்ணாதீர்கள். நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பது மட்டுமல்ல எங்கு இருந்து அதைச் சொல்கிறீர்கள் என்பதும் முக்கியம். அம்புட்டுத்தான் நமக்குத் தெரியும் 🙂

  • ரமணன் அய்யா.. அவ்வையாரும், அபிராமபட்டரும் பாடியது கடவுளின் மீதான காதலால்.. தற்போதைய எழுத்தாளர்கள் அச்செய்யுள்களை எடுத்தாள்வது தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ள நமது கடவுளர்களை இழிவுபடுத்தும் கும்பல்கள்…அறிவுஜீவிகளாகக் காட்டிக்கொள்ள “ அம்மா அப்பா சொன்னதால் பால்காய்ச்ச்சினேன்” என்ற சொல்லக்கூடிய மக்கள்.. அதில்தான் வித்தியாசம்…

    ஜெயக்குமார்

  • பாரா நீங்கள் எழுதியதை திரும்ப படித்துப் பார்த்தேன். என் மூளைக்கு நீங்கள் சொல்லியிருப்பது தவறாக தெரியவில்லை. வலையுலகை பொறுத்தவரை சொல்ல வரும் கருத்தின் அடி நாதம் புரிந்து கொள்ளப்படுவதை விட வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் செய்து கொள்வதே பரவலாக காணப்படுகிறது. விளக்கங்களும், எதிர்வினைகளும் உங்கள் னேரத்தை தான் வீணடிக்கும். ஃப்ரீயா வுடுங்க தல…

  • திருப்பாவைக்கு பதிலாக திருவாசகம் என்று எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

    ஒவ்வொரு மார்கழி மாதமும் இணையத்தில் யாராவது திருப்பாவைக்கு விளக்கம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரா முருகன், புதிய மாதவி, எ.அ.பாலா, குமரன், கே ஆர் ரவிசங்கர், ஜடாயு இன்னும் பலர் இருக்கலாம். அதனால்தானோ என்னவோ இன்னமும் நயமாக கையாண்டிருக்கலாம் என்று தோன்றியது.

  • The difference between pornography and erotic writing is thin.
    Para got it right but slipped in writing about it. Texts can be read in many ways. One can ignore all philosophy and still enjoy Andal’s poems as erotic writing. For some it may appear to be
    pornography. For some it will be symbolic poetry. Still body is a body and a breast is a breast. Andal’s poems are in public . They are not private dairies, or emails or twits between her and Kannan or her Lord. When a text is available to public, it is bound to be read and interpretted in many ways. It is as simple as that. You dont need a Derrida to know this. All arts and literature can be appropriated and enjoyed in many ways. Listen to that famous song in Suriyan to know this. Deva had used the tune of a devotional song for an erotic song.

    Jatayu and Aravindan Neelakatan are ardent supporters of RSS and Narendra Modi. They are not ardent admirers or supporters of artistic freedom/ freedom of expression. These Hindutva talibans deserve only a Periyar who . Para is not a Periyar. He should know that he cannot please everyone in such issues.

  • எல்லா கருத்துகளையும் எல்லாரும் எழுதி விட்டதால், சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.

    இருந்தாலும், ஆண்டாளை ச.தேவி வகை ஃபோர்ன் எழுதுபவருடன் கம்பேர் செய்ய வேண்டுமா என்பது நியாயமான கேள்வி. ஆண்டாளை பிராட்டி அவதாரமாக நினைத்து இதைச் சொல்லவில்லை என்று டிஸ்கி போட்டுக் கொள்கிறேன். ஓர் அற்புதக் கவியாக பார்த்தே இதைச் சொல்கிறேன். நன்றி.
    ஒன்று மட்டும்:
    பாரா, நீங்க ஒரு நல்ல கிரிமினல் லாயரா வந்திருக்க வேண்டியவர். அதனால, நல்ல எழுத்தாளர் இல்லை என்று அர்த்தமில்லை 🙂

    அப்படியே கொஞ்சம் சுயவிளம்பரம்:

    எனது திருப்பாவைப் பதிவுகளுக்கு கிளிக் செய்யவும்

    எ.அ.பாலா

  • ஒன்று சொல்ல விட்டு விட்டேன்!

    ஆண்டாளை “அவ்வகை” எழுத்தாளர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகக் கூட சொல்ல யாதொரு அடிப்படையோ காரணமோ இருப்பதாக நினைக்க முடியவில்லை !!!!

    எ.அ.பாலா

  • //Jatayu and Aravindan Neelakatan are ardent supporters of RSS and Narendra Modi. They are not ardent admirers or supporters of artistic freedom/ freedom of expression. //
    காமெடி மேல் காமெடி போதுமடா சாமி
    காமெடிதான் கருத்தும் என்றால் ஆகாது போணி
    🙂

  • ‘ஆண்டாளை “அவ்வகை” எழுத்தாளர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகக் கூட சொல்ல யாதொரு அடிப்படையோ காரணமோ இருப்பதாக நினைக்க முடியவில்லை !!!!’

    ஐயா, அதை ‘அவ்வகை’ எழுத்தாளர்களல்லவா சொல்லவேண்டும், நீங்கள் சொன்னால் போதாது unless you consider yourself to be one among them 🙂

    ‘பாரா, நீங்க ஒரு நல்ல கிரிமினல் லாயரா வந்திருக்க வேண்டியவர்’.
    கிரிமினல் லாயர் கட்சிக்காரன் கொலையே செய்தாலும், கொலை நடந்தது உண்மை, என் கட்சிக்காரன் செய்யவில்லை என்று வாதாடுவார்.இங்கே பாரா அப்படி ஒங்கி அடித்து வாதம் செய்யவில்லை.
    எனக்கென்னவோ கிரிமினில லாயராக அவர் சோபிக்கமாட்டார் என்று தோன்றுகிறது.

  • பண்புடன் பாமா,

    என் கருத்தை நான் சொல்லாமல், அவ்வகை எழுத்தாளர்கள் சொல்ல முடியாது. நான் கேட்டது “காரணம் / அடிப்படை” ! புரியலைன்னா விட்டுடுங்க, ப்ளீஸ் 🙂
    எ.அ.பாலா

  • //Following up to Aravindan’s multiple definition, here is how the US Supreme court, after several years of serious debate, defined pornography:
    ஆண்டாளுக்கும் அமெரிக்காவிற்கும் என்னய்யா சம்பந்தம்? ஒரு விவஸ்தை வேணாம்?

    Srini

  • டியர் பா.ரா.,

    ஆண்டாள் மட்டுமல்ல, எந்த நூலையுமே ஆசிரியரின் தகுதி குறித்த ஆச்சிரியங்கள் இல்லாது படிக்க முடியும். காமம் மூலாதாரத்தோடு தொடர்புடையது. யோகமோ மந்திர ஜபமோ அல்லது அவன் நினைவாகவே ஆன்மீகத்தில் திளைத்தலோ, மூலாதாரத்தைத் தூண்டவே செய்யும். அப்போது காமமும் கிளர்ந்தெழவே செய்யும். (கிளர்ந்து-‘எழவே’ செய்யும் என்று படிக்க வேண்டாம்).

    எங்கிருக்கிறோம் என்ற பிரக்ஞையற்ற நிலை நல்ல கூடலில் ஏற்படும். அது, இருவர் என்ற எண்ணத்தையும் மறைக்கும். இது தான் தானற்றுப் போதலில் உச்சபட்ச மனித அனுபவம். எது பெரியதாய் அறியப்பட்டிருக்கிறதோ அதைச் சொல்லி, அதைப் போல பல்லாயிரம் மடங்கு இருக்கும் இறையோடு கலக்கும் அந்தப் பேரின்பம் என்பதைச் சொல்வது தான் நோக்கம்.

    ஆண்டாள் சிறுமியாகவோ வளர்ந்ததொரு பெண்ணாகவோ இருக்கலாம். இந்த காதலும் கூடலும் தைல தாரை போல் இடையறாது இனிக்குமாயின், அது பரம்பொருளிடம் உண்டாகட்டும் என்று பாடியிருக்கலாம். சஞ்சரிப்பது உன்னுடைய இயல்பு, அதை மாற்றமுடியாதெனில், அவ்வாறே ஆகட்டும் மனமே… பிரம்ம வஸ்துவிடத்தில் சஞ்சரிப்பாய் என்று சதாசிவ பிரம்மேந்திரர் “மானச சஞ்சரரே – ப்ரஹ்மணி மானச சஞ்சரரே”வில் பாடுவதைப் போல.

    அன்புடன்,

    ஈரோடு நாகராஜன்.

  • //அரவிந்தன் மன்னிக்கவேண்டும், எழுத்தை எனக்கு எழுத்தாக மட்டுமே பார்க்கத் தெரியும். ஹிந்துத்வ கலர் கண்ணாடி எனக்கு அவசியமில்லை.//
    எனக்கு பயமாக இருக்கிறது. நாளை நீங்கள் எனக்கு பெண்ணை பெண்ணாகத்தான் பார்க்கமுடியும். உணர்ச்சி, பாசக்கண்ணாடி போட்டு பார்க்கமுடியாது என்று எழுதிவிட்டால்? அப்புறம் தாய்க்கும், தாரத்திற்கும், சகோதரிகளையும் எப்படி வேறுபடுத்துவீர்கள்? அவர்களை வயதை வைத்து மட்டுமா? எழுத்தை தரம் வைத்து பார்ப்பதுபோல்?

  • ஆண்டாள் பாடல பற்றி நீங்கள் சொல்லிஇருப்பது நிச்சயம்
    சாதரண பொது ஜனத்திற்கு ஜீரணிக்க தக்க ஒன்றாக இருக்காது.
    உங்கள் அலைவரிசை மற்றவர்க்கு இருக்க வேண்டுமே.

    /அடக்கடவுளே, நல்லகாரியம் செய்தால் தப்பா? அல்லது மக்கள் திருந்தவே கூடாது என்பது உங்கள் கருத்தா? /
    மக்கள் என்ன திருந்தனும் என்பது புரியவில்லை. மக்கள் ஆண்டாள் மேல் வைத்திருக்கும் எண்ணம் என்ன மற்ற வேண்டும் ?

    ஜெயக்குமார் குறி உள்ளபடி இதர மார்க்கங்களிலும் உள்ள நல்ல போர்னோகிராபி எழுத்தாளர்களையும், எழுத்துக்களையும் கோடிட்டு கட்டி இருக்கலாமே.

  • தெரியாமத்தான் கேக்கறேன்..,
    கடவுளர்க்கும் மனிதர்களைப் போல உடல் உறுப்புகளும் உணர்வுகளும் காம சுகங்களும் இன விருத்தியும் இருக்குமா என்ன‌..?

  • All literary critics including me agree that words are always the most effective means of explicit communication.
    Andal has clearly shown the way to all women to yearn for the attainment of physical/sexual fulfillment by a process which inspite of the pasage of time is very effective in making even frigid girls agree to enter into matrimony at the end of the 30 days of VRADHAM during the Marghazi month.
    Mere religious paint over her pasurams cannot remove the underlying simple meaning that a girl should desire a young man may be like Krishna and show her earnestness in her desire and endure the chill weather if needed and attain her goal by rightful means.
    venugopal

  • சிரிவைணவர்களால் ஆண்டாள் இலக்குமியின் அவதாரமாகப் பார்க்கப்படுகிறார். அவரின் பக்திப்பனுவல் அவர்களால் இறை வழிப்பாட்டின் இன்றியமையாத அம்சமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவர்களின் ஆச்சாரியர்கள் அவர்களுக்கு இப்படித்தான் எடுக்கவேண்டும் எனச்சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.. ஆச்சாரியர்களுள் முதன்மையானவரான இராமானுஜர் ஆண்டாளில் பக்திப்பனுவல் மிக ஈடுபாடு கொண்டு, ‘திருப்பாவை ஜீயர்’ என்று அழைக்கப்படுகிறார். இது நிற்க.

    அப்பக்திப்பனுவல் வெறும் சொற்கள் மட்டும்தானா ? அவைகளின் நோக்கம் என்ன என்றும் பார்க்கலாமல்லவா ?

    காண்பவர் கண்களே எஃது அழகு என்பதை தீர்மானிக்கிறது என்பது ஒரு ஆங்கிலப்பழமொழி. (Beauty lies in the eyes of the Beholder) அதன்படி, “ஆண்டாளின் பக்திப்பனுவலை, வெறும் சொற்கள்; அவைகளுக்கு வெறும் மேற்போக்கான அகராதி தரும் கருத்துகளே; அவற்றின்படி எனக்கு அவைகள் ‘காம ரசனையோ’ தருகின்றன” என்பது எழுதுவருக்கு மட்டுமே சரி. அது அவரின் எழுத்துரிமை; அல்லது கருத்துரிமை. ஆனால், ஆண்டாள் அவர்களை இலக்குமியின் அவதாரமாக எடுத்தோதுபவருக்கு ? என்ன வலியைத் தரும் என்பது எழுத்துரிமை கொண்டாடுபவர் சிந்திப்பாரா ?

    ஆரும் தடுக்கப்போவதில்லை. பெரியார்தாசன், ஆண்டாள் திருப்பாவையை ஆற்றொழுக்காக மேடையில் பேசி ஆழ்வாரைப் பற்றி இழிவாக பொருள் எடுத்து கூட்டத்தினரின் ஒருவகையான இரசனைக்குத் தீனி போடுவதற்கும், “எனக்கு காம ரசனையே தருகின்றன; எழுத்தை எழுத்தாகத்தான் பார்க்கவேண்டும்” என்று சொல்லும் பாராவுக்கு எனக்கு வேறுபாடு தெரியவில்லை.
    இம்மதம் ஆரையும் சென்று தலையை வெட்டுவேன் எனச்சொல்வதில்லை. எனவே பாரா போன்றவர்களுக்கு எழுத்துரிமை உண்டு.

    ஆனால் சிரிவைணவர்களில் வலி அவர்களுக்குத்தானே?
    ஒன்று செய்யலாம். பாராவை படிக்காமல் விடலாம்

  • Recently I have argued in Iqbal Selvan’s blog against allowing the alleged image of the Prophet Mohamed there, which Selvan did, and which have hurt many devote Tamil muslims who read his blog regularly. They expressed their anguish there; but Selvan s adamant and contends, just as para here, that he has the right to do so.

    Individual rights to express their opinions vs the rights of those who feel hurt if such opinions challenge their belief; or insult it.

    Among the Azhvaars, Andal is the only female saint. For that gender fact, some exclude her from the galaxy of Azhwaars, along with Madurakavi, and reduce the number just to 10.

    Be that as it may. Andal’s approach i.e her style of bhakti, is out and out feminine, which is not a new break through, coz. catholic religion, too, claims to have one St Threse of Spain who looked upon Jesus as her husband; and all catholic nuns are asked to take Jesus as their beloved.

    In the history of Hindu religion, too, there may have been many women bhaktas who felt their flesh and blood dedicated to their Lord. As they may not have been poets like Andal, they cd not have expressed their bizarre style of bhakti. Andal did. Method namely feminine longing for physical union with Lord is the same.

    This longing is unique to women only. Because the BODY as a factor is a serious matter with women. She thinks it is sacred to be offered to the one and only man or male worthy of her uxorial love.

    In culture, he is called husband to her. But the word ‘husband’ us understood and taken by her in a complex way, which the man himself does not know or ack.

    The physical union with him – is not all for sexual pleasure, and more so, in the case of saints like Andal and Therese with their Lords who are males like Ranganathar or Jesus.

    Para is a man. He cant understand all this. The body, her approach to it, its sacred use; and the spiritual benefits etc – are all territories to which no man can enter; or empathise.

    For men, it is pure sex. What else ? He gets his share of giggles and sneers; and sometimes, vicarious pleasures of self indulged pleasure (which is called masturbation). As they do in locker room or rest rooms fantazising the anatomy of their female bosses. For them, the boss is not a CEO who got her sterling education in an acclaimed Mgment instu; but mere flesh and blood with voluptuously to salivate at !

    A lot can be written to explain the unique nature of Andal’s bakthi. I will do in my blog some day, but in Tamil.

    However, we sd not conclude it hopelessly.

    There s a hope and that is, when u take Andal to read, and if u r a man, please purgate urself of all the feeling and attachment to the fact of being a male. Be a woman in heart and thinking. U can travel along with her and seek the same physical union (which in fact, a spiritual union) with the Lord.

    Try today. Hav done many times.

  • To continue a bit more, forgive me.

    The fact of being a woman is denied to all of us, males; and, consequently, the efforts to realise the same kind of bhakti as realised by Andal, is also denied to us.

    We lose heart. But 2 Azhvaars among the 12 didn’t.

    Thirumangai aazhvaar and Nammaazhvaars. They respectively assumed the fictious female forms, with the names, Parakala Nayaki and Parangusa Nayaki.

    They longed for the physical union with their Lord and their poems are more sensual than Andaals.

    The socalled punarchi, Parakala nayaki goes through with the Lord in a garden.

    May, all of us, read and decide the qn:

    Is it all bad to have such approach to the Lord ?

    Why the two male saints attempted that?

    The answer positive will validate my position in my earlier mge.

    And, to put in a nutshell,

    You r incomplete as a male.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி