கோவிந்தசாமி பிறந்திருக்கக்கூடாது. பிறந்து விட்டான். அவன் அறிவுக்கு இயக்கங்கள் பக்கக் போயிருக்கக்கூடாது. போய் விட்டான். திருமணமாவது செய்திருக்கக்கூடாது. செய்துவிட்டான். மனைவி மீது அளப்பற்கறிய காதல் வைத்திருக்கக்கூடாது. வைத்து விட்டான். மனைவி வெறுக்குமளவு நடந்திருக்கக்கூடாது. நடந்து கொண்டான். ஒழிந்து போகிறதென விட்டு நீலநகரம் வந்திருக்கக்கூடாது. வந்து விட்டான். சூனியனை கண்டிருக்கக்கூடாது. கண்டு விட்டான். நிழலை பிரிந்திருக்கக்கூடாது. பிரிந்து விட்டான். குறைந்தபட்சம் சூனியன் குறிப்பிட்ட இடத்தில் இருக்கச்சொன்னதை மீறி அவ்விடத்திலிருந்து அகலவும் செய்தான். காரணம்,,பசி.
பூமியை போல் உணவு எங்கும் கிடைக்காமல் வீட்டுக்கு வீடு மட்டுமே எனும் ஏற்பாடு புதிய மனிதனுக்கு தடுமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கும். மடத்தனம் மிகுந்தவனுக்கு தாய்மொழியே தகறாறு என்கையில் பிறமொழி கற்பது என்பது குதிரைக்கொம்பே.
இயக்கத்தலைவரின் உணர்வை உள்வாங்குபவன், மொழியை உள்வாங்க இயலாமல் தவிக்கமட்டுமே இயன்ற கோவிந்தசாமி நீலநகரத்தின் புதிய மொழியை எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்?
அவனது விதியின் சதியே பூமியின் பெண் ஒருத்தியை அங்கே சந்திக்க நேர்ந்தது.
அவள் மூலம் சாகரிகாவின் எழுத்தை பற்றியும் தெரிந்துகொள்ள நேர்ந்தது.
“அடேய் துரதிருஷ்டசாலி கோவிந்தா! உன் கதையை மசாலா கலந்து ஊருக்கே படம் காட்டியிருக்கிறாள் உன் முன்னாள் மனைவி பலகை மூலம்! அவள் மாற்றத்தை நீ இன்னும் காணவில்லை. உன் நிழல் மட்டுமே கண்டிருக்கிறது. நீ கண்டால் இன்னும் அதிர்வாய். ஒரு வேளை விதி உன்னை இன்ஸ்டால்மென்ட் முறையில் அடித்துக்கொண்டே இருக்கிறதோ? என்ன செய்யப்போகிறாய்? சூனியன் நீலநகரவாசியானது போல் நீ சூனியனானால் தான் என்ன? கொஞ்சம் யோசி”
மேலும் வாசிப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.