அனுபவம்

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 4)

மாயாஜால உலகிலிருந்து நழுவி எதார்த்த உலகிற்கு பயணிக்க தொடங்கியிருக்கிறது. பிரமாண்டமாக பயணித்த முந்தைய அத்தியாயங்களில் இருந்து சற்று ஆசுவாசமாக இந்த அத்தியாயம் சிரிக்க வைத்து பார்க்கிறது. அதிலும் அந்த கடைசி வரி. கோவிந்தசாமிக்கு எதிர்மறையான சாகரிகா. எதிலும் அவளுக்கு இவன் பொருத்தமில்லை. இது எப்பிடி பயணிக்கும் எனும் ஆவல் எனக்குள் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. மாய உலகில் பயணிக்கும் அத்தியாயங்களில் வரும் தத்துவ வரிகளை இந்த அத்தியாயங்களில் காணாது கொஞ்சம் ஏக்கமாக இருக்கிறது. ஆனாலும் அந்தந்த காட்சி படிமங்களுக்கு ஏற்ப தானே எழுத முடியும். பாராவின் அனுபவ எழுத்தில் நீந்தி பயணிக்க மெய்யாலுமே பிடித்திருக்கிறது.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி