ஓர் அறிவிப்பு

 

முன்போல் அடிக்கடி இங்கே எழுத முடிவதில்லை. வேலைகள் ஒரு பக்கம். ஆர்வக்குறைவு முக்கியம். எழுத்தைக் குறைத்து, கொஞ்சநாள் வெறுமனே படித்துக்கொண்டிருக்கலாம் என்று திட்டம். எனவே படிக்கிறேன்.

எழுதாதது பற்றிக் கடிதம் எழுதி விசாரிக்கும் நண்பர்கள் மன்னிக்கவும். திரும்பவும் வலையெழுத்தில் ஆர்வம் வரும்போது வருவேன். இந்தப் பதிவின் முக்கிய நோக்கம், இங்கே நான் எழுதிய பல பழைய கட்டுரைகளை இப்போது படித்துவிட்டு கமெண்ட் போடும் வாசகர்களைப் பற்றியது.

கடந்த 10ம் தேதி பரிசோதனையாக ஒரு பத்தி எழுதியபோது தளத்துக்கு வந்ததுடன் சரி. அதன்பின் இன்றுதான் எட்டிப்பார்க்கிறேன். பல பழைய கட்டுரைகளுக்கு வாசகர் கருத்துகள் வந்து காத்திருக்கின்றன. அவற்றை அனுமதிக்காமல் காலம் கடத்த நேர்ந்தது பற்றி வருந்துகிறேன். இப்போது அவை வெளியாகிவிட்டன.

அடுத்து திரும்ப எப்போது வருவேன் என்று தெரியவில்லை. எனவே கமெண்ட் எழுதுபவர்கள் அவை உடனுக்குடன் வெளியாகாதது பற்றி என்மீது வருத்தம் கொள்ள வேண்டாம். உடனே பதில் சொல்லியே தீரவேண்டுமென்றால் தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்புங்கள்.

சூரியக்கதிர் மாதமிருமுறை இதழில் விரைவில் ஒரு column தொடங்குகிறேன். அக்கட்டுரைகளை மட்டுமாவது இனி வலையில் வெளியிட முயற்சி செய்கிறேன்.

Share

9 comments

 • காரணம் என்னவாக இருந்தாலும், எல்லா எழுத்தாளர்களுக்கும் இதுபோல ஒரு சுணக்கம் ஏற்படுகிறது என்பது என் கருத்து.

  நீங்கள் எப்போது எழுதினாலும் வாசிக்க காத்திருக்கிறோம்.

 • என்ன சோதனை சார் இது? இனி எங்கு போய் மக்கள் நல்ல பதிவு நன்றி பத்ரி என இடுகை இட முடியும்?

 • டிவிட்டரில் நாள்தோறும் தலாய்லாமாவின் பொன்மொழிகளை தவறாமல் ஊன்றிப் படித்துத்தான் நீங்கள் இந்த முடிவிற்கு வந்ததாக சொல்கிறார்களே,உண்மையா? 🙂

 • டிவிட்டருக்கே நேரம் சரியாக இருக்கிறது.
  அதுதான் உண்மை

 • நல்ல விஷயம்தான். நிறையப் படித்துக் கொஞ்சமாக எழுதும் போது எழுத்தின் தரம் இன்னும் உயரும். எழுந்து வருவதுதான் எழுத்து, அது எழுப்பி வரவழைப்பது அல்ல என்று திசைகள் பத்திரிகை விழாவில் குமரி அனந்தன் சொன்னார்.

  ஆனால் ஒரு விஷயம் உங்கள் மாதிரி பக்குவப்பட்ட எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினாலும் சுவாரஸ்யம் குறைவதில்லை என்பதுதான் நிஜம்.

  http://kgjawarlal.wordpress.com

 • it is better if u close this comment section. even for contacting you u better close that contact form…people here are not deserved to tell comments… i hate people, humans…

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter