* 33வது சென்னை புத்தகக் காட்சி, எதிர்வரும் டிசம்பர் 30ம் தேதி, புதன் கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானம் – பச்சையப்பன் கல்லூரி எதிரே, சேத்துப்பட்டு, சென்னை 30.
* பபாசி அமைப்பின் புதிய தலைவர் சேது சொக்கலிங்கம் [கவிதா பதிப்பகம்] வரவேற்புரை ஆற்ற, வழக்கம்போல் நல்லி குப்புசாமி செட்டியார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்.
* தமிழக முதல்வர் கண்காட்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புறை ஆற்றுகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துரை வழங்குகிறார்.
* கலைஞர் பொற்கிழி விருது பெறுவோர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் அறிஞர் ச.வே. சுப்பிரமணியன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் [கவிதைக்காக], ஆறு அழகப்பன் [நாடகத்துறை], கு. சின்னப்ப பாரதி [புனைவு], அபுரி சாயாதேவி [தெலுங்கு எழுத்தாளர்], முனைவர் சோ.ந. கந்தசாமி [ஆங்கில இலக்கியம்] ஆகியோர் விருது பெறுகிறார்கள்.
* இது தவிர பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது, மல்லிகை புக் செண்டர் ஓ.ஆர். சுரேஷுக்கும், பதிப்பகச் செம்மல் ட்ச. கணபதி விருது பூங்கொடி பதிப்பகம் வே. சுப்பையாவுக்கும், ஆர்.கே. நாராயண் விருது மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜனுக்கும், அழ. வள்ளியப்பா விருது குழ. கதிரேசனுக்கும், சிறந்த நூலகர் விருது எம். முத்துசாமிக்கும் வழங்கப்படுகிறது.
* தொடக்க விழா நிகழ்ச்சிகளைக் கவிஞர் நெல்லை ஜெயந்தா தொகுத்து வழங்குகிறார்.
* தினசரி மாலை வேளைகளில் வழக்கம்போல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஜனவரி 03 அன்று மாலை 6 மணிக்குக் கமல்ஹாசன் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் பேசுகிறார். ஜனவரி 04ம் தேதி எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் படைப்புலகம் குறித்துச் சொற்பொழிவாற்றுகிறார். 07ம் தேதி சாலமன் பாப்பையா பட்டிமன்றம்.
* அழைப்பிதழ் வந்துவிட்டது. ஸ்கேன் ஆனபிறகு upload செய்யப் பார்க்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
3ந்தேதி மாலை கண்டிப்பாக ஆஜர் 🙂