அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 17)

கோவிந்தசாமி அவனது கவிதைக்கு நிழலிடமிருந்து கிடைத்த மதிப்புரையை (?!) கேட்டதில் இருந்து சற்று கோபமாக இருக்கிறான். என்னதான் இருந்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே.
அனால், கோவிந்தசாமி ‘பேரிகை’ இதழில் காதலர் தினத்துக்காக எழுதிய கவிதை கொஞ்சம் பரவாயில்லை போல தான் இருந்தது. அப்போது அவனுக்கு தெரிந்த அறிஞர் ஒருவர் மூலம், கிருஷ்ணரால் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறான். அப்போதும் கோவிந்தசாமி தனது வாயை குடுத்து திட்டு வாங்கிக் கொள்கிறான்.
காதலர் தினத்துக்கு எதிராய் ஒரு தலைவர் விட்ட அறிக்கையைத், தனக்கு சாதகமாய் மாற்றிக் கொள்கிறான் கோவிந்தசாமி. அவனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. சில சமயம் இப்படி அறிவு கூர்மை மிகுந்து செயல் படுகிறான். சில சமயம் தன் வாயாலேயே கேடு விளைவித்து கொள்கிறான்.
சாகரிகாவின் மூளைக்குள் குதித்த சூனியன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி