பாரா பராக்! பராக்! பழைய திரைப்படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் படகோட்டிக்கொண்டே ‘வசந்தகால நதிகளிலே’ என்ற பாடலைப் பாடுவார். அதுபோலத்தான் இந்த நாவலில் பாரா.
சூனியருக்கே சூனியம் வைக்கிறார் இந்தப் பாரா. அடுத்தவர் மனைவியை அபகரிக்கிறார் பாரா. மூளைச்சலவை செய்கிறார், நினைவுகளை அழிக்கிறார் கதைக்குத் திருப்புமுனையாக இருக்கிறார்.
இவர் செய்வன பின்னாளில் யாருக்காவது நன்மையைத் தருமா? ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்பார்கள். இந்தப் பாராவின் சூனியங்கள் யாருக்கு எந்த நன்மையைத் தரவுள்ளது? உண்மையிலேயே இந்தப் பாரா நல்லவர்தானா?
எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்தால் தயிர்சாதமும் மோர்மிளகாய்வற்றலும் சாப்பிடும் ‘அம்பி’யாகத்தான் இருக்கிறார். ஆனால், கதைமாந்தர் படைப்பில் அநியாயத்துக்கு ‘அந்நியனா’கவே இருக்கிறார்.