கோவிந்தசாமி காதலின் ஆழத்தை நிழலின் மூலமாக தெரிந்துக் கொள்கிறோம், வேண்டுதலைக் கூட தன்னை மறந்து, சாகரிகாவை கண்ணில் காட்டி விடுமாறு வேண்டும் கோவிந்தசாமியின் காதல் ஆழமாக தெரிகிறது. எதற்காக இவ்வளவு தூரம் அவனை வெறுத்து ஒதுக்கியும், அவளை சேர பாடுபடுகிறான் என இப்போது புரிகிறது. காதல் தன் வேலையைக் காட்டுகிறது.
ரொம்ப இயல்பான காதலின் பதற்றம், தன்னுடைய தோற்றத்தின் மீதான கவனம் என நம்மை நெகிழ வைக்கிறது கோவிந்தசாமியின் செயல்கள்.
இதற்கு இடையில் நிழல், சூனியனைப் பிரிந்து சுதந்திரமாய் சுற்ற ஆரம்பித்து விட்டது. நம் நிழலுக்கும் தனியொரு ஆத்மா,ஆசைகள், கனவுகள் இருக்குமோ ? இப்படியாக யோசிக்க வைத்து விட்டார் எழுத்தாளர்.
கோவிந்தசாமியை சந்திக்கிறது நிழல். என் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக சண்டை மூள்கிறது. வாக்குவாதம் முற்றிப் போய் சூனியனோடு சேர்ந்து நீயும் எனக்கு எதிராக சதி செய்கிறாய் என நிழல் மீதும் குற்றம் சுமத்த நிழல் கோபத்தின் உச்சிக்கே செல்கிறது.
இந்தப் பிரிவோடு அத்தியாயம் முடிகிறது.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!