அனுபவம்

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 20)

சூனியனுக்கு சாகரிகாவின் மீது நேரடியாக எந்த வன்மமும் இல்லைதான். உண்மையில் அவள்மீது அவனுக்கு கொஞ்சம் காமமும் இருந்தது. அவனது எண்ணமெல்லாம் அவளை எப்படியாவது அந்த முட்டாள் கோவிந்தனுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவனது இலக்கிய எதிரி்க்கு அவள் துணைபோய் விட்டாள் என்பதை அறிந்தவுடன்தான் அந்த வன்மம் தொடங்கியது.
அந்த நகரத்தின் கலாசார செயலாளர் ஆவது பெருமைக்குறிய விஷயம் போலிருக்கிறது. அந்த பதவியை அவள் அடையப் போகிறாள் எனத் தெரிந்ததும்
சூனியன் தன் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யத் துணிகிறான்.
ஒருவருக்கு களங்கத்தை ஏற்படுத்த சமூக வலைதளத்தில் அவரைப் பற்றி அவதூறு பரப்பினால் முடிந்தது. அவர் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவர் பக்கத்து நியாயத்தை யாரும் பொருட்படுத்தாமல் அவர் மீது அனைவரும் வன்மத்தைப் பொழிவது இயற்கை.
அதே கதைதான் சாகரிகாவுக்கும். தேர்வுக் குழுவினரே சந்தேகப்பட்டு அவளிடம் விசாரிக்க, அவள் சுதாரிப்பதற்குள் அடுத்த அவதூறு வந்து விடுகிறது.
நடந்தவை அத்தனையும் அவளுக்கு ஓரளவு அவளது தோழி மூலமாகத் தெரியவர மூர்ச்சையாகிறாள். இந்த நேரத்தில்தான் ஆபத்பாந்தவன் பா.ரா. தோன்றுவார் என நம்புகிறேன். அதற்காக அடுத்த அத்தியாயம் வரை காத்திருக்கலாம் தவறில்லை.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி