அனுபவம்

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 41)

தன்னைக் காதல் வலை(சூழ்ச்சி)யில் வீழ்த்தி காரியம் முடிந்ததும் தூக்கியடிச்சிட்டு போனவளை பரிகாசிக்கவும் முடியாமல், காதலைத் துறக்கவும் முடியாமல் கலங்கிப் போன நிழல் காதலில் காயப்படுபவனின் கடைசிப் புகலிடமாய் இருக்கும் சாரயக்கடைக்கு வந்து சேர்கிறது. அங்கு கோவிந்தசாமியும் சரக்கடித்துக் கொண்டிருக்கிறான். பிரிந்தவர்கள் சந்தித்துக் கொள்கிறார்க்ள். சோகத்தின் வீரியம் குறைய இடைஇடையே பெக்கோடு ஏமாற்றங்களுக்கும், துரோகங்களுக்கும் மன்னிப்பு கேட்ட கையோடு அவரவர் கதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். மது – மங்கை – கவிதை வெண்பலகையில் வருவது கண்ட கோவிந்தசாமி தன் கவிதைத் திறன் குறித்து நிழல் வழியே நமக்கும் சொல்லிக் கொள்கிறான். ”மனுஷின் கவிதை மதுவுக்கான வெஞ்சனம்” என்பது இலக்கியவாதிகள் சார்ந்த சாடலின் குறியீடாக இருக்கும் என நினைக்கிறேன்.
சாகரிகாவை மீண்டும் அடைய கோவிந்தசாமிக்கு யோசனை சொல்லும் நிழல், அதற்குத் தடையாக இருக்கும் அவள் தோழி ஷில்பாவை அவளிடம் இருந்து பிரிக்க சூனியனிடம் ஆலோசனை கேட்கலாம் என்று கூறுகிறது. அதில் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறும் கோவிந்தசாமி, நீலநகரத்தில் சூனியனைப் போல சுற்றித் திரியும் வேறு சில சூனியன்களில் ஒருவரின் உதவியை நாடலாம் என யோசிப்பதாய் கூறுகிறான். அதற்கு வாய்ப்பில்லை என்ற நிழல் தானே ஒரு சூனியன் தான் எனச் சொல்லி நீ நம்புவாயா? எனக் கேட்கிறது. அந்தக் கேள்வி நமக்கும் சேர்த்தே!
கோவிந்தசாமி, நிழலின் சந்திப்பு புதியதொரு கூட்டணியாய் உருமாறி கபடவேடதாரியில் திருப்பத்தை உருவாக்கும் என நினைத்தால் முடிவு வேறு திசையில் நகர்ந்திருக்கிறது. அந்த நகர்வு யாரை வீழ்த்தும்? என்பது இனி வரும் அத்தியாயங்களில் தெரியக்கூடும்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி