The Real Salute என்னும் குறும்படத்தின் லிங்க்கை அதன் இயக்குநர் ஷக்தி எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு குறும்படத்தின் நோக்கமும் வெளிப்பாடும் எப்படி அமையவேண்டும் என்பதை மிகச் சரியாகக் காட்டுகிற படமாக இது இருக்கிறது. வெறும் மூன்றரை நிமிடப் படம்தான். ஆனால் ஓடி முடித்ததும் உருவாகிற உணர்வெழுச்சி வெகுநேரம் மனத்தைவிட்டு நீங்காதிருக்கிறது.
தேச பக்தி என்பதும் கொடியின்மீதான மரியாதை என்பதும் காலிகளாலும் போலி அறிவுஜீவிகளாலும் களவாடப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் இம்மாதிரியான முயற்சி கண்டிப்பாகப் பாராட்டப்படவேண்டியது.
இயக்குநருக்கு வாழ்த்துகள்.
படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=Dxv9CwCpJFo