அனுபவம்

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 34)

மந்திரமலரை பறிக்க வந்து கொண்டிருக்கும் கோவிந்தசாமி இன்னும் வந்து சேரவில்லை. சாகரிகாவுக்கும் ஷில்பாவுக்கும் சூனியன் அன்ட் கோ அந்த காட்டில் இருப்பது தெரியாமல் நிழலை சுற்றிப் பார்க்க விட்டுவிட்டு இவர்கள் ரிலாக்ஸ் ஆகிவிட்டனர். நிழலுக்கு இவை எதுவும் தெரியாமல் காட்டை சுற்றிப் பார்த்துவிட்டு மந்திரமலர் தடாகத்தின் கரையில் வந்து அமர்கிறது.

அதனைத்தேடி வந்த செம்மொழிப்ரியா அதனைத் தன் வலையில் வீழ்த்தி சாகரிகாவுக்கு எதிராக திருப்புவதில் கிட்டத்தட்ட வெற்றி பெறுகிறாள்.

அவள் செல்லும்போது கடைசியாக அந்த மந்திரமலரை பறித்து நிழலின் மீது போட்டுவிட்டு செல்கிறாள். அந்த மந்திரமலர் நிழலை அவள் மீது பைத்தியமாக்க செய்யும் என்பது வியப்பில்லை.

அன்றைய இரவுக்கான மலரை இழந்த கோவிந்தசாமி என்ன செய்வான்? மறுநாள் இரவுக்குள் அவன் என்னென்ன ஆவான்? நிழல் என்ன செய்யப்போகிறது? அதுல்யாவின் திட்டம் என்ன? இவையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் தெளிவாகும்.

பா.சுதாகர்

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி