மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையோடு இணைந்துதான் வாழ்ந்திருக்கிறான். காலத்தை விட்டு மனிதன் விலக விலக இயற்கையுடனான பிணைப்பும் குறைந்தது. அது போல சூனியனியர்கள் இயற்கை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் நீலநகரவாசிகளின் உலகிலோ அது அவர்களை விட்டுப் பல மைல் தூரத்தில் சென்றுள்ளது.தானாக விளையக் கூடிய தாவரங்கள், மனிதன் விளைவிக்கக்கூடிய தாவரங்கள் உள்ளன என சூனியன் மனிதர்களுக்கு இயற்கையின் அருமையை உணர்த்துகிறான்.
அவன் தான் விரும்பிய ஒரு இடத்தைக் கண்டறிகிறான். பல விலங்குகளை வீட்டின் வெளியே நாய்க்குட்டி,பூனைக்குட்டி போல காண்கிறான். நமக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடிய யாளியைக் காண்கிறான். இப்பகுதியை வாசிக்கும் பொழுது அவ்விலங்கைனை நேரில் காண்பது போல் உணர்ந்தேன். அருமையான எழுத்துருவம்.
சூனியனுக்குப் பிடிக்காத ஒன்றையும் இங்கு சுட்டுகிறான். அவர்களுக்குள் அமைக்கப்ட்டா தனிக்குகைக்களுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு திட்டுகிறார்கள். வெண்பலகைக்கு வரும் போது பாசம் பொங்கப் பேசுகின்றனர் என்று தன் சினத்தை வெளிப்படுத்துகிறான்.
பா.ராகவனின் மனக்குமுறலை இங்கே காணமுடிகிறது. அறிவினைத் தரும் அட்சயப்பாத்திரமான புத்தகங்களைத் தேடி தேடிப் படிக்க வேண்டுமென ஆர்வத்துடன் வனவாசிகளைப் பற்றிக் கூறும் பொழுது அவர்களின் வழியே தன் உள்ளக்கருத்தைப் பகிர்கிறார். இப்பகுதியில் காணப்படும் உரையாடலை வாசிக்கும் பொழுது வள்ளுவரின்
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”
என்ற குறள்தான் என் நினைவுக்குள் வந்து சென்றது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.