ஒருவழியாக கோவிந்தசாமி நீலவனத்துக்கு வந்துவிட்டான். வந்தவன் தனியாக வராமல் ஒரு குழுவில் ஒரு அங்கத்தினனாக வருகிறான். அதற்கு ஒரு திருப்பதி கதை பின்னனியாக சொல்லப்படுகிறது.
அவன் சாகரிகாவின் கணவன் என்பதை அறிந்து கொள்கிற அந்தக்குழுவினர் அவனிடம் சாகரிகாவைப் பற்றியே விசாரிக்கின்றனர்.
இடையில் இன்னொரு தகவலும் சொல்கிறார்கள். இரவு ராணி எனும் அந்த மந்திரமலர், மாதம் ஒரு முறை தான் பூக்குமாம். ஏற்கனவே பூத்தமலரை செம்மொழிப்ரியா நிழலின் மீது உபயோகப்படுத்திவிட்டாள். அடுத்த பூ பறிக்க அவன் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமோ?
தான் ஒரு ஏகப்பத்தினி விரதன் என்று நினைத்துக் கொண்டிருப்பவனை தமிழழகியும் முல்லைக்கொடியும் இணைந்து சேன்ட்விச் மசாஜ் செய்து அசத்தி தங்களது காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள். அதை அழகாகப் படம் பிடிக்கிறாள் அதுல்யா.
அடுத்தடுத்து என்ன நடக்கும்? இப்படியொரு ஆபாச படத்தை வெண்பலகையில் பதிவிடுவார்களா? அதை அந்தப் பலகை ஏற்குமா? கோவிந்தசாமியின் இந்த நிலையை அறிந்தால் சாகரிகா என்ன செய்வாள்? ஏற்கனவே நிழல் அவளது கட்டுப்பாட்டை விட்டே விலகிவிட்டதே, அடுத்தது என்ன? அடுத்த மந்திர மலராவது கோவிந்தசாமிக்கு கிடைக்குமா போன்ற கேள்விகளுடன் காத்திருக்கிறேன்.