கோவிந்தசாமிக்குச் சாகரிகாவின் மேல் உள்ள காதல் கொஞ்சமும் குறையவில்லை. கனவில் கூட அவளை விட்டு அவனுக்குப் பிரிய மனமில்லை.ஆனால் அவள் கனவில் கூட அவனை விட்டுப் பிரிகிறாள். நிஜயத்தில் நடத்திப் பார்க்க முடியாததைத்தான் கனவில் நிகழ்த்திப் பார்ப்போம். அது போல் கோவிந்தசாமியும் தன்னையும் தன் நிழலைப் பற்றியும் தனக்கு நேரும் நிகழ்வையும் கனவில் அவளிடம் கூறி ஆறுதல் அடைகிறான். கனவில் அவனை அளவுக்கு அதிகமாகவே நேசிக்கிறாள். சாகரிகாவின் மேல் தவறு இருந்தாலும் அதனை மறந்து அவளுடன் வாழ்வவே அவன் என்ணுகிறான். மருத்துவமனை செவிலியிடம் தன் மனக்குமுறலைக் கூறுகிறான். தனக்கு எதிராகச் செயல்படுவோர் யார் என்பதையும் அறிய இயலவில்லை என்பதையும் கூறுகிறான்.அதற்கு அவர் ஓர் உபாயம் கூறுகிறார். நீல வனத்தில் மாயத்தடாகத்தில் பூக்கும் மந்திர மலரைப் பறித்து சாகரிகாவின் வீட்டுக்குள் போட்டு விட்டால் எழுபத்திரண்டு மணி நேரத்தில் அவள் அவனைத் தேடி வருவாள் எனக் கூறுகிறார்.அது மட்டும் அல்ல ஆழ்மனத்தின் அடியாழத்தில் புரையோடிவிட்டிருக்கும் நினைவுகளைக் கிளறி வெளியே எடுக்கும் சக்தி இரவு ராணிக்கு உண்டு என்பதையும் கூடுதல் தகவலாகக் கூறுகிறார். அதைக் கேட்டவுடனேயே மருத்துவமனையிலிருந்து கோவிந்தசாமி வீறுகொண்டு புறப்பட்டான். அவனுக்குப் பூ கிடைத்ததா? சாகரிகா மனம் மாறினாளா? என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.