பொதுவாக உலகத்தில் என்ன நடக்கிறது? பிரம்மன் ஒரு உயிரை படைக்கிறான். அந்த உயிர் போகிற போக்கில் இந்த மண்ணில் வாழ்ந்து ஒரு சரித்திரத்தை விட்டுவிட்டுப் போகிறது. அதனை எத்தனை பேர் நினைவில் எவ்வளவு நாட்கள் வைத்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம்.
ஆனால், தான் அந்த பிரம்மனைப் போலல்ல என நினைக்கும் சூனியன் தான் படைக்கப் போகும் படைப்பின் சரித்திரத்தை முதலில் எழுதிவிட்டு அதன் பிறகே அவளை படைக்கிறன். அழகிய அந்த படைப்பை படைக்கும் முன்னரே அவளுக்கு அழகான பெயர்சூட்டி அவளது முன்னோரின் சரித்திரத்தையும் விளக்கிவிடுகிறான்.
செம்மொழிபிரியாவைப் போல ஒரு ஃபேக் ஐடியாக இல்லாமல் ஒரு நிஜமான ஐடியையே உருவாக்கி அதன் செயல்பாடுகளையும் முன்னரே தீர்மாணித்து வைக்கிறான்.
அதுல்யா என்னும் அந்தப் பெண் தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கிறாள். தன் பூர்வீகத்தின் மீது ஆர்வம் கொண்டு அங்கே செல்லும் வழியில், தனது பூர்வீக வரலாற்றைத்தேடி பாண்டி சென்று கொண்டிருக்கும் நம் கோவிந்தசாமியை சந்திக்கிறாள்.
இருவரும் அறிமுகமாகிறார்கள். அந்த அழகிய அதுல்யாவிடம் மகுடிக்கு அடங்கிய பாம்பாய், தான் வந்த வேலை மறந்த கோவிந்தன் அவளோடு அவளது பூர்வீகம் செல்கிறான். மற்றவை அடுத்த அத்தியாயத்தில்.