இதென்ன கூத்து? பாரா தன்னை தானே இழுத்து கதையில் விட்டுக்கொள்கிறாரே. போதாத குறைக்கு கோரக்கர் வேறு. சரி இருக்கட்டும். இப்போதைக்கு பாராவை சூனியன் எதிரியாகப் பார்க்கிறான். ஏனெனில் பாரா கடவுளின் கைக்கூலியான கோரக்கர் சித்தரின் அதிதீவிர பக்தர்.என்றால் சூனியன் சாலச்சிறந்த சங்கியான கோவிந்துக்கு ஏன் உதவ நினைக்கிறான்?அவன் சூனியனின் எதிரியான கடவுளின் தீவிர குருட்டு பக்தனாயிற்றே?
நீல நகரத்தின் வெண்பலகையை புரட்டி நிறலய தகவல்கள் சேகரித்துக் கொள்கிறான் இந்த சூனியன். அவனுக்கு சாகரிகா மேல் ஏன் இத்தனை ஆர்வம் என்று தோன்றியது?அவளின் எழுத்து திறனை வியந்து நிற்கிறான். அவள் இதுவரை எழுதிய அத்தனை தகவல்களையும் திரட்டி படிக்கும்போது தான் சாகரிகா கோவிந்தைப் பற்றி எழுதியதை நம்மிடம் கூறுகிறான்.
பாண்டிச்சேரிக்கு மன அமைதியை தேடி செல்பவனுக்கு குடி என்றாலும் குடிப்பவர்கள் என்றாலும் அலர்ஜி. இது எப்படி இருக்கிறதென்றால் திருப்பதிக்கு சென்று மொட்டை தலையைப் பார்த்து பயப்படுவதுப் போல்தான் இருக்கிறது. ஒருவழியாக அவன் போய் தொலைந்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கும் சாகரிகா தானே எல்லா ஏற்பாடுகளையும் செய்து அனுப்பி வைக்கிறாள். அவள் பாடு அவளுக்கு.
இறுதியாக அவன் கிளம்பியதும் பெருமூச்சோடு தன் நண்பனுடன் தமிழ்க் குடிமகனை சந்திக்க செல்லும் போது கோவிந்தசாமியின் அழைப்பு. அந்த இடம் அல்டிமேட் என்று மனதில் சொல்லிக்கொண்டேன்.ஏனெனில் சாகரிகா கோவிந்திடம் பாண்டிச்சேரியிலிருந்து வாட்கா வாங்கி வரச்சொல்லி அனுப்பியிருந்தாள்.நேரடியாக பேசும் பேச்சுக்களே பாதிதான் புரியும் எனும்போது அவனிடம் போய் கோட் வோர்ட் சொன்னால் எப்படி? அதான் கிரைப் வாட்டர் மெடிக்கலில் வாங்கி அனுப்பவா என்று கேட்கிறான். அந்த அப்பாவி முகம் மனதில் வந்து மறைகிறது அல்லவா?