குரல் கொடுங்கள்!

99411-37700
575758

முதலாவது தொலைபேசி அழைப்புக்கு. அடுத்தது எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு.

மேற்படி மொபைல் எண்ணில் நீங்கள் தொடர்பு கொண்டு பேசலாம். எங்களுடைய New Horizon Mediaவின் புத்தகங்கள் பற்றி, உங்கள் எதிர்பார்ப்புகள், பாராட்டுகள், கோபங்கள், கண்டனங்கள், ஆர்வங்கள், அக்கறைகள் அனைத்தையும் இந்த எண்ணில் தொடர்புகொண்டு சொல்லலாம். எங்களுடைய வெளியீடுகள் தொடர்பாக நீங்கள் என்ன கேட்க / பேச விரும்பினாலும் சரி. 99411-37700ஐ அழைக்கலாம்.

இது ஒரு தானியங்கி சேவை. ஆனால் ஒழுங்காக பதில் வந்து சேரும். சம்பந்தப்பட்ட எழுத்தாளர், ஆசிரியர், விளம்பர, விற்பனை அதிகாரிகள், பதிப்பாளர் உங்கள் வினாவுக்கேற்ற விடையளிப்பார்கள். கச்சாமுச்சாவென்று திட்டித் தீர்த்தீர்களானாலும் அது போய்ச் சேரவேண்டியவர்கள் வசம் ஒழுங்காகச் சமர்ப்பிக்கப்பட்டுவிடும்.

அடுத்த எண், எங்களுடைய புதிய வெளியீடுகள், நாங்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு உரிய சமயத்தில் வந்து சேர உதவியாக நிறுவப்பட்டுள்ளது. இந்த 575758 என்கிற எண்ணுக்கு நீங்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதுமானது. start NHM. அவ்வளவே. தகவல்கள் உங்களுக்கு வரத் தொடங்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் இந்த இரு சேவைகளை அறிமுகப்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. வாசகர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி