அனுபவம் ஆரோக்கியம் உணவு மெஸ்

மாமி மெஸ்

நாராயணனின் இந்தக் கட்டுரையின் கடைசி வரிக்கு நன்றி. கூகுள் சாட்டில் வழி சொன்ன விதத்தில் சற்று கோயிந்தசாமித்தனம் இருப்பினும், வேகாத மதிய வெயிலில் டிடிகே சாலையின் இப்புறமும் அப்புறமுமாக நடந்து களைத்தாலும் ஒருவழியாக அந்த மெஸ்ஸைக் கண்டுபிடித்துவிட்டேன். சிவசாய் மெஸ். டிடிகே சாலையில் நாரதகான சபாவுக்கு எதிரே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் நா.கா. சபாவுக்கு எதிர்சாரியில் ஒரு சிறு சந்தில் இருக்கிறது. சந்து முனையில் இருக்கும் ஒரு சிறு கோயில் அடையாளம்.

சிறிய ஹாலில் ஏழெட்டு டேபிள்கள் விரித்து மேலுக்கு சூடாக மின்விசிறி ஓடுகிறது. முப்பத்தி மூன்று ரூபாய் சாப்பாட்டில் வழக்கமான சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், பொறியல், கூட்டு, தயிர், அப்பளம், ஊறுகாய், பருப்புப் பொடிதான் என்றாலும் சுவையிலும் பரிமாறும் விதத்திலும் வித்தியாசங்கள் பல.

சற்றும் மசாலா நெடி கிடையாது. நூறு சதம் வீட்டுச் சாப்பாட்டு சுவை. வெங்காயம், பூண்டு கூட இல்

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி