எதிர்ப்பட்ட பெண்ணின் கையில் அரையடி உயரமுள்ள காகிதக் கோப்பை இருந்தது. கண்ணாடி மூடி போட்டு பாதுகாக்கப்பட்டிருந்த அதன் உள்ளே குளிர்ந்த காப்பியும் மேலாக மிதக்கும் ஐஸ் க்ரீமும் தெரிந்தன. நேர் வகிடு எடுத்த தலை மாதிரி அதன் உச்சியில் ஒரு ஓட்டை போட்டு ஸ்டிரா சொருகியிருந்தது. கவனித்ததில் அவள் கால் வாசி கூடக் குடித்திருக்கவில்லை. ஆனால் சுற்றி வரும்போது கையில் காப்பிக் கோப்பை இருக்க வேண்டியது அவசியம். அந்தப்...
புளியோதரை செய்வது எப்படி?
புளியோதரை உருவாக்கம் என்பது புளிக் காய்ச்சல் என்னும் கலைப் பணியில் தொடங்குகிறது. இந்தப் புளிக் காய்ச்சல் என்பது சாராயக் காய்ச்சல் போன்றே வளமான கலை மனத்தையும் கடும் பணி நேர்த்தியையும் ஒருங்கே கோருவது.
முதுகு வலி, கழுத்து வலி
இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொள்ளும்போது முதுகு வலியைக் குறித்துப் பெரும்பாலும் பேசாதிருப்பதில்லை என்று நினைக்கிறேன். இரு தினங்களுக்கு முன்னர் செல்வேந்திரன் பேசினார். அவரும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி குறித்து ஒரு ஆவர்த்தனம் வாசித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வந்தார். மணிக் கணக்கில்லாமல் உட்கார்ந்து எழுதுவோருக்கு இவ்விரு பிராந்தியங்களும் வலிக்கத்தான் செய்யும். வலியைக் குறைத்துக்கொள்ள சில...
வெங்காயம், பூண்டு
உணவில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பது / சேர்க்காதது குறித்துச் சில நாள்களாக நிறைய கருத்துகள் கண்ணில் படுகின்றன. எல்லாம் அட்சய பாத்திரத்தின் அருள். அந்த இரண்டும் கெட்டது என்று நினைக்கக்கூடியவர்கள் இன்று அநேகமாக யாரும் இல்லை. ஆசாரம் என்று சொல்லி பூண்டு வெங்காயத்தை ஒதுக்கி வைத்த தலைமுறை இன்றில்லை. உண்மையில் பூண்டு வெங்காயம் மட்டுமல்ல. நிலத்துக்கு அடியில் விளையும் எதையுமே உணவில் சேர்க்கக்கூடாது...
மன் கி (பிசிபேளா) பாத்
என்னுடைய நிலமெல்லாம் ரத்தத்தில் பாலஸ்தீனியர் பகுதிகளில் யூதர்கள் எப்படிப் பரவி நிறைந்தார்கள் என்று விரிவாக எழுதியிருப்பேன். ஏழைகளுக்கு வங்கிகளால் தர இயலாத அளவுக்குக் கடன் கொடுத்து, அடைக்க வேண்டிய காலம் கடக்கும்போது கடனுக்கு ஈடாக நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டு விடுவார்கள். இது ஒரு வழி. இரண்டாவது, ரைட் ராயலாகவே ஒரு பெரும் தொகையைச் சொல்லி, அதற்கு நிலங்களை விற்கச் சொல்லிக் கேட்பார்கள். பணம் கிடைத்தால்...
இளைப்பது சுலபம் – மின்நூல் வெளியீடு
குங்குமத்தில் நான் எழுதிய இந்தத் தொடர், கிழக்கு பதிப்பகத்தில் நூலாக வெளிவந்தது. இப்போது அமேசான் கிண்டிலில் மின்நூலாகவும் வெளியாகியுள்ளது. 2016 ஜூன் மாதம் தொடங்கி இன்றுவரை எனது சௌக்கியத்துக்கு சகாயம் செய்துகொண்டிருப்பது பேலியோ. பேலியோ குழுவில் கற்றது, அப்பால், படித்து அறிந்தது அனைத்தையும் இந்நூலில் விவரித்திருக்கிறேன். பழைய என்னைப் போன்ற பூதாகாரமான ஆகிருதியாளர்கள், தற்போதைய என்னைப் போன்ற...
ருசியியல் – 38
சொன்னால் நம்ப வேண்டும். சமையல் துறையில் எனக்கு இருந்த ஒரே தேர்ச்சி, சாப்பிடுவது மட்டும்தான். தமிழக, கேரள, கர்நாடக, ஆந்திர பாணி சமையலானாலும் சரி, பெரிய வித்தியாசங்கள் இல்லாத வடக்கத்திய சமையலானாலும் சரி, அப்படிப் பொத்தாம்பொது ஆகாது; எங்களுக்கென்று தனித்துவம் உண்டு என்று காட்டிக்கொள்வதற்காகவே சகலமான காரப் பலகாரங்களிலும் கண்ணராவியாக நாலு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து வைக்கிற குஜராத்தி, ராஜஸ்தானி...
நட்ஸ்
நேற்று நான் பயணம் செய்த இண்டிகோ விமானத்தில் எனக்கு எதிர் சீட்டில் இருந்த மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் எனக்குப் பழைய பாராகவனை நினைவூட்டியது.