உடல்நலம்

முதுகு வலி, கழுத்து வலி

இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொள்ளும்போது முதுகு வலியைக் குறித்துப் பெரும்பாலும் பேசாதிருப்பதில்லை என்று நினைக்கிறேன். இரு தினங்களுக்கு முன்னர் செல்வேந்திரன் பேசினார். அவரும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி குறித்து ஒரு ஆவர்த்தனம் வாசித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வந்தார். மணிக் கணக்கில்லாமல் உட்கார்ந்து எழுதுவோருக்கு இவ்விரு பிராந்தியங்களும் வலிக்கத்தான் செய்யும். வலியைக் குறைத்துக்கொள்ள சில உபாயங்கள்… Read More »முதுகு வலி, கழுத்து வலி

வெங்காயம், பூண்டு

உணவில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பது / சேர்க்காதது குறித்துச் சில நாள்களாக நிறைய கருத்துகள் கண்ணில் படுகின்றன. எல்லாம் அட்சய பாத்திரத்தின் அருள். அந்த இரண்டும் கெட்டது என்று நினைக்கக்கூடியவர்கள் இன்று அநேகமாக யாரும் இல்லை. ஆசாரம் என்று சொல்லி பூண்டு வெங்காயத்தை ஒதுக்கி வைத்த தலைமுறை இன்றில்லை. உண்மையில் பூண்டு வெங்காயம் மட்டுமல்ல. நிலத்துக்கு… Read More »வெங்காயம், பூண்டு

இளைப்பது சுலபம் – மின்நூல் வெளியீடு

குங்குமத்தில் நான் எழுதிய இந்தத் தொடர், கிழக்கு பதிப்பகத்தில் நூலாக வெளிவந்தது. இப்போது அமேசான் கிண்டிலில் மின்நூலாகவும் வெளியாகியுள்ளது. 2016 ஜூன் மாதம் தொடங்கி இன்றுவரை எனது சௌக்கியத்துக்கு சகாயம் செய்துகொண்டிருப்பது பேலியோ. பேலியோ குழுவில் கற்றது, அப்பால், படித்து அறிந்தது அனைத்தையும் இந்நூலில் விவரித்திருக்கிறேன். பழைய என்னைப் போன்ற பூதாகாரமான ஆகிருதியாளர்கள், தற்போதைய என்னைப்… Read More »இளைப்பது சுலபம் – மின்நூல் வெளியீடு

உண்ணாதிருத்தல்

தினசரி மூன்று வேளை உணவு என்பதை மறந்து ஆறு மாதங்களாகின்றன. இப்போதெல்லாம் மதியமும் இரவும் மட்டுமே சாப்பாடு. மதியம் பனீருடன் ஏதேனும் ஒரு காய்கறிப் பொரியல். இரவு எழுபது பாதாம். அதாவது, பதினாறு மணி நேரம் உண்ணாதிருந்துவிட்டு, மீதி எட்டு மணி நேரத்தில் இரு உணவுகளை உட்கொள்கிறேன்.

சட்டென்று ஒருநாள் ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தோன்றி, மாதம் இருநாள் இருபத்து நான்கு மணி நேர விரதம் இருக்க ஆரம்பித்தேன். கொழுப்பு உணவு முறையில் பசி இருக்காது என்பது ஒரு வசதி. ஓரிரு மாதங்கள் பிரச்னை ஏதுமின்றி முழு நாள் உண்ணாதிருக்க முடிந்ததால், அதையே சற்று நீட்டித்து வாரம் ஒருமுறை என்று ஆக்கினேன். உணவின் மீதான இச்சையும், ருசி பற்றிய நினைவும் மறந்து வேலையில் ஆழ்வது வசதியாக இருக்கிறது. களைப்போ, சோர்வோ இருந்தால் இது சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். அப்படியேதும் இதுவரை இல்லை என்பதால் விரதத்தை உற்சாகமாகவே கடைப்பிடிக்க முடிகிறது.Read More »உண்ணாதிருத்தல்

பேய் ஓட்டுவது எப்படி?

 

12.3.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற பேலியோ கருத்தரங்கில் நான் நிகழ்த்திய உரை.Read More »பேய் ஓட்டுவது எப்படி?