Categoryஆரோக்கியம்

தீர்மான காண்டம்

செயல் எதுவானாலும், எவ்வளவு முக்கியமானாலும் அது நடந்தேற அடிப்படைத் தேவைகள் என்று சில உண்டு. அதில் தலையாயது உடல் ஆரோக்கியம். சுண்டு விரல் நகம் சற்றுப் பெயர்ந்திருந்தாலும் அன்றைய பொழுதின் அனைத்துப் பணிகளும் கெடும். ஒரு சிறிய தலைவலி ஒரு மொத்த நாளையே புரட்டிப் போடக்கூடிய வல்லமை மிக்கது. காய்ச்சல், சளி, சுளுக்கு, கழுத்து வலி, முதுகு வலி தொடங்கி பெரும் உடல் உபாதைகள் வரை மனிதனின் உற்சாகமான செயல்பாட்டை...

முதுகு வலி, கழுத்து வலி

இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொள்ளும்போது முதுகு வலியைக் குறித்துப் பெரும்பாலும் பேசாதிருப்பதில்லை என்று நினைக்கிறேன். இரு தினங்களுக்கு முன்னர் செல்வேந்திரன் பேசினார். அவரும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி குறித்து ஒரு ஆவர்த்தனம் வாசித்துவிட்டுத்தான் அடுத்த விஷயத்துக்கே வந்தார். மணிக் கணக்கில்லாமல் உட்கார்ந்து எழுதுவோருக்கு இவ்விரு பிராந்தியங்களும் வலிக்கத்தான் செய்யும். வலியைக் குறைத்துக்கொள்ள சில...

இளைப்பது சுலபம் – மின்நூல் வெளியீடு

குங்குமத்தில் நான் எழுதிய இந்தத் தொடர், கிழக்கு பதிப்பகத்தில் நூலாக வெளிவந்தது. இப்போது அமேசான் கிண்டிலில் மின்நூலாகவும் வெளியாகியுள்ளது. 2016 ஜூன் மாதம் தொடங்கி இன்றுவரை எனது சௌக்கியத்துக்கு சகாயம் செய்துகொண்டிருப்பது பேலியோ. பேலியோ குழுவில் கற்றது, அப்பால், படித்து அறிந்தது அனைத்தையும் இந்நூலில் விவரித்திருக்கிறேன். பழைய என்னைப் போன்ற பூதாகாரமான ஆகிருதியாளர்கள், தற்போதைய என்னைப் போன்ற...

நட்ஸ்

நேற்று நான் பயணம் செய்த இண்டிகோ விமானத்தில் எனக்கு எதிர் சீட்டில் இருந்த மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் எனக்குப் பழைய பாராகவனை நினைவூட்டியது.

சீரடிக்குச் சென்ற பூச்சாண்டி

நண்பர்களோடு இரண்டு நாள் சீரடி சென்று திரும்பினேன். இந்த இரண்டு நாள்களும் எழுத்து வேலை, தொலைபேசி அழைப்புகள் இரண்டும் இல்லை. படப்பிடிப்புகளுக்கும் பத்திரிகைகளுக்கும் தேவையானதை முன்கூட்டியே எழுதிக் கொடுத்துவிட்டுப் போனதால் இது சாத்தியமானது. பயணமோ, தரிசனமோ சிரமமாக இல்லை. உணவுதான் சற்றுப் படுத்திவிட்டது. எனது வழக்கமான ஒரு வேளை உணவு என்பதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மதியம் கிடைத்ததை உண்டு, இரவு பாதாம்...

ருசியியல் 17

வேள்வி நடக்கிறபோது அசுரர்கள் அக்கிரமம் செய்து அதைக் கலைப்பார்கள் என்று கதை கேட்டிருக்கிறீர்களா? அப்படியொரு அசுரத்தனமான தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்காகிப் போனேன். அதற்குமுன்னால் அப்படியென்ன பெரிய வேள்வி இங்கே நடந்து வாழ்ந்தது என்பீரானால், இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களை மீண்டுமொருமுறை படித்துவிடவும். எனது எடைக்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் போதிய அளவுக்குச் சொல்லியிருக்கிறேன். மாவுச் சத்து...

உண்ணாதிருத்தல்

தினசரி மூன்று வேளை உணவு என்பதை மறந்து ஆறு மாதங்களாகின்றன. இப்போதெல்லாம் மதியமும் இரவும் மட்டுமே சாப்பாடு. மதியம் பனீருடன் ஏதேனும் ஒரு காய்கறிப் பொரியல். இரவு எழுபது பாதாம். அதாவது, பதினாறு மணி நேரம் உண்ணாதிருந்துவிட்டு, மீதி எட்டு மணி நேரத்தில் இரு உணவுகளை உட்கொள்கிறேன். சட்டென்று ஒருநாள் ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தோன்றி, மாதம் இருநாள் இருபத்து நான்கு மணி நேர விரதம் இருக்க ஆரம்பித்தேன்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி