கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 23)

முதலில் குனியன் சொல்கிறான், ஏதோ ஒரு மலை, மலையில் ஒரு மரம், அதிலொரு பழம், அந்தப் பழத்தின் சிறப்பு, அதைக் கொண்டு அவன் செய்யப் போகும் பணிகள், இவ்வளவுதான். ஆனால் இதையே ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் விவரித்துக் கொண்டே சென்றால், வேறென்ன, பிரமிப்புதான் மிஞ்சுகிறது. அவையெல்லாம் நமது கற்பனைக்கு மிகவும் அப்பாற்பட்டவை.

பிறகு வருவதெல்லாம் நாம் அறிந்த விஷயங்கள் தான். ஆனால் அவற்றை சொல்வது யார்? அந்த வார்த்தைப்பிரயோகங்களை வைத்துப் பார்க்கும் போதும், கடைசியில் போகரை நினைத்து தியானம் செய்வதாக சொல்லும் போதும் உறுதியாகத் தெரிவது அதை உரைப்பது சூனியன் அல்ல. வேறு யார் ? பா.ரா. தான் என்பது என் கணிப்பு.

சமூக வலைத்தளம் தான் நீலநகரம். அங்கே எந்தவொரு பிரச்சினையும் அடுத்த பிரச்சினை வரும்வரை தான். அப்படித்தான் செம்மொழிப்பிரியாவால் உருவாக்கப்பட்ட பிரச்சினையும் புஸ்வானமாகிவிட்டது போலிருக்கிறது.

சாகரிகாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிழல் என்ன செய்யப்போகிறது? சாகரிகாவின் பிரச்சினைகள் உண்மையிலேயே புஸ்வானமாகிவிட்டனவா? சூனியனின் அடுத்த நடவடிக்கை என்ன? நீலநகரத்தில் பா.ரா.வின் பாத்திரம் என்ன? கோவிந்தசாமி என்ன ஆனான்? ஷில்பா என்ன செய்யப்போகிறாள்? என்ற கேள்விகளுடன் அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருப்போம்.

பா.சுதாகர்

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!