தலைப்பைப் படித்தவுடன் இதில் ஏதோ விஷமத்தனம் இருக்கிறது என்பது பிடிபட, படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
தனது நிழலைப்பிரிந்த கோவிந்தசாமி உணவைத் தேடி அலையும் பொழுது ,நீல நகரத்தின் மொழி புரியாமல், தனக்கு அந்நியமான நீல நகரத்தில் இந்தியை தேசிய மொழியாக்கிட முடியவில்லையே எனத் தவிக்கும் இடத்தில் .. அவன் முட்டாள் மட்டுமல்ல விவகாரமானவனும் கூட என்பது தெளிவாகிறது.
இதுவரை புரியாமல் இருந்த பல விஷயங்கள் இந்த அத்தியாயத்தில் புரிபடுகிறது.
கோவிந்தசாமியின் பழைய நினைவுகளின் மூலமாக கடற்கரை மாநாட்டை விவரிக்கும் இடத்தில் ,சங்கிகளின் அடி முட்டாள் தனத்தை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் .
தனக்கே தெளிவில்லாத ஒரு விஷயத்தில் மனைவியையும் ஈடுபடுத்த வேண்டும் என நினைக்கும் இடத்தில் கோவிந்தசாமியின் வில்லத்தனமான முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது.
கடற்கரை மாநாட்டில் கோவிந்தசாமியின் பரவசத்தை பார்க்கும்பொழுது ஒரு திரைப்படத்தில் மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்ட கவுண்டமணி திரைப்படம் பார்ப்பது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
குடியுரிமை அற்றவர்கள் விரைவாக வெளியேறிட வேண்டும் என்னும் வரி பல அரசியல் உண்மைகளை கண்முன் கொண்டு வருகிறது.
அத்தியாயத்தின் தலைப்புக்கான காரணத்தை சரயூ நதி சம்பவம் தெளிவாக்குகிறது.
கதையுடன் இணைத்து இன்றைய அரசியலை சொல்லியிருப்பது
மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.