நீல நகரில் சூனியனும், கோவிந்தசாமியின் நிழலும் முற்றிலும் நீல நகர வாசி
யாக மாறியிருந்த சாகரிகாவை கண்டதும் வியக்கின்றனர் .
சாகரிகாவின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம் குறித்தும், தனக்கு அவள் மேல் இருக்கும் காதல் குறித்தும் அவளிடத்தில் புலம்பும் கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறது.
சாகரிகா சற்றும் அலட்டிக்கொள்ளாமல் தனக்கு அவன் மேல் காதல் இல்லை என்றும் , தன் உலகில் அவனுக்கு இடமில்லை என்றும் கூறுகிறாள்.
அவளின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கோவிந்தசாமியின் நிழல் தன் புலம்பலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
முற்றுப்பெறாத இந்த நீண்ட உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த சாகரிகா தன் வீட்டு வெண்பலகையில் நீல நகர மொழியில் எழுத, கோவிந்தசாமியின் நிழல் வீட்டிற்கு வெளியே தூக்கி வீசப்படுகிறது.
இரகசியங்கள் இல்லாத நீல நகரத்தின் தகவல் தொழில்நுட்பம் சுவாரசியமாக உள்ளது. ஒவ்வொருவரின் வீட்டினுள்ளும் வெண் பலகையில் எழுதப்படும் செய்திகள் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பொதுப் பலகையில் உடனுக்குடன் வெளியாகிக் கொண்டிருந்தது விசித்திரமாக இருக்கிறது.
எதையும் இலகுவாக கற்றுக் கொள்வதிலும், பிரச்சினைகளை தெளிவாக கையாள்வதிலும் சூனியனின் அறிவாற்றல்,அவனுக்கு கதாநாயக அந்தஸ்தை பெற்றுத்தருகிறது.
சாகரிகா தன்னுடன் வர மறுத்ததை கோவிந்தசாமி எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறான். அவனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?
ஆர்வத்துடன் அடுத்த அத்தியாயத்திற்காக ….
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.