அதிசயம் தான். ஆனால் சொல்லாமலிருக்க இயலவில்லை. உண்மையாகவே கோவிந்தசாமியின் நிழல், அவனை விட புத்திசாலித்தனமாகவும் கொஞ்சம் தன்மானம் உள்ளதாகவும் இருக்கிறது.
இல்லையேல் சாகரிகா கோவிந்தசாமியுடன் வாழமாட்டாள் என்பதையும் இனி அவளை அம்பலப்படுத்துவதே சிறப்பு என்பதையும் உணர்ந்திருக்குமா?!
ஆனால் சூனியன் சில Protocol வைத்திருக்கிறானே. நிழலின் நிஜத்தை உணர மீண்டும் அவன் கபாலத்தை மீண்டும் ஊடுருவ வேண்டும். சாகரிகாவின் சிகைக்குள் புகுந்து மூளையை படிக்க வேண்டும். சூனியன் கோவிந்தசாமிக்கு உதவ வந்தானா அல்லது அவன் நிழலிடம் சிக்கிக்கொள்ள வந்தானா என தெரியவில்லை.
கதை 1989 தமிழ் அரசியல்வாதியை முன்னமே தொட்டது, 1992 ல் வட மற்றும் தமிழக அளவில் நடந்த விஷயங்களை தற்போது கதை தொடுகிறது. சூனியன் மிகப்பெரும் அழிவை தர திட்டமிட்டு முடியாமல் போனதற்காக தண்டிக்கப்பட்டான் என தெரிகிறது.
முடியாமல் போனது ஏன் என தெரியவில்லை. மலையாள சோதிடனின் வாக்கு பலிக்கவில்லை. அரசி பேரரசி ஆகவில்லை. கடவுள் சோதிடன் மூலம் சொன்ன பொய் ஒரு திட்டத்தையே மாற்றியிருக்கிறது. அந்த அழிவு திட்டத்தை எவ்வாறு சூனியன் திட்டமிட்டான்?அரசியின் வருகை அத்திட்டத்தை எவ்வாறு மாற்றியது என…
தொடர்ந்து படிப்போம்.