நினைத்தது சரிதான். சூனியனும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போனான். கோவிந்தசாமியின் நிழலுக்கும் கோவிந்தசாமியைப்போலவே சாகரிகாவின் மீது அளவற்ற காதலோ.. அலத்து பிரதிபிம்பம் அசலுக்காக அங்கலாய்கிறதோ, எதுவோ ஒன்று சாகரிகாவிடம் கெஞ்சத்துவங்கிவிட்டது.
ரகசியமற்ற மாயஉலகில் கோவிந்தசாமியின் வருகைக்கான காரணம் பகிரங்கப்பட்டது தான் மிச்சம்.
நீலநகரம் சராசரி மனிதர்களின் நேரெதிர் குணாதிசயம் கொண்டவர்களாக தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டத்துக்குள் அளவற்ற சுதந்திரம் கிடைத்தால்? இரு காண்டிராஸ்ட் விஷயங்கள் ஒன்றாக கலந்த கலவையாக நீலநகர மாந்தர்கள் உள்ளனர். இந்தநிலை கோவிந்தசாமியை காதலித்து பின்னர் சுத்தமாக பிடிக்காமல் போன சாகரிகாவுக்கு நீலநகரம் பிடித்துப்போனது வியப்பில்லை.
விரட்டியடிக்கப்பட்ட (தூக்கியெறியப்பட்ட) கோவிந்தசாமியின் நிழலை ஓரிடத்தில் இருத்தி பயணித்த சூனியன், மணித்துளிகளில் சாகரிகாவை சந்தித்து, பின் நீலநகரப்பிரஜையாகி உணர்வுபாஷையை புரிந்தும் கொண்டான்.
சாகரிகாவின் எழுத்தின் அர்த்தமும் புலப்பட்டது. கோவிந்தசாமியின் மீதான அதீத வெறுப்பும் புலப்பட்டது!
மேலும்.. வாசிப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.