மனிதர்களின் உலகத்தில் அந்தரங்கமானவையாக இருக்கும் அனைத்தும் நீல நகரத்தில் வெளிப்படையாக இருக்கின்றன. உடல், உள்ளம், உணர்வு என்று எதுவும் விதிவிலக்கல்ல. இப்படிச் சொல்வது மேலோட்டமான பார்வை யாக கூட இருக்கலாம். ஆனால் இதை வாசிக்கையில் மனம் திடுக்கிடத்தான் செய்கின்றது. கற்பனை செய்து பார்க்கவே சற்று பயமாகத்தான் இருக்கிறது.
சாகரிகாவின் நிராகரிப்பு கோவிந்தசாமியுடனான அவளுடைய உரையாடலின் ஒவ்வொரு வசனத்திலும் அழுத்தமாக தெறித்து விழுவதைப் படிக்கையில் சூனியன் அவர்கள் இருவரையும் எப்படி சேர்த்து வைக்கப் போகிறான் என்பதை அறியும் ஆர்வம் அதிகரிக்கின்றது.
ஆனால் அது எப்படி? நீல நகரத்தின் பிரஜை ஆவதற்கு மனிதர்களுக்கும் சூனியர்களுக்கும் ஒரேவிதமான சட்ட திட்டங்கள் இருக்கமுடியும்?
எல்லாம் சரி. ஆனால் கடைசியில் சாகரிகா வெண் பலகையில் எழுதியது என்னவென்று தெரிந்து கொண்டபோது ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போய்விட்டேன். பாவம் கோவிந்தசாமி ! ஆனால் அது நிழலுக்கு எப்படி பொருந்தும்? சாகரிகா பொய் எழுதி இருக்கக்கூடுமா? அல்லது அது நிழல் தான் என்பதை தெரிந்து கொண்டு விட்டாளா? இந்த கேள்விகளுக்கான பதில் அடுத்த அத்தியாயங்களில் தெரியலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.