பூவுலகிலிலிருந்து மாய நீலநகரம் பயணித்த கோவிந்தசாமிக்கு இப்போதைக்கு சூனியன் கடவுள் மாதிரி தான் தெரிந்திருப்பான்.
கோவிந்தசாமியின் குணம் புதிய விஷயங்களை கவனிக்கவோ ஆச்சரிக்கவோ செய்யாமல் சாகரிகாவை மட்டுமே இலக்காக கொண்டு தன் நிழலை சூனியனுடன் அனுப்பி உள்ளான். கோவித்தசாமியின் நிழல் சற்று பரவாயில்லை. கொஞ்சம் ஆச்சரியப்படுகிறது நீலநகரின் மனிதர்களை பார்த்து!
ஆனால் சூனியன் அனைத்து விஷயங்களையும் கவனிக்கிறான். நகரின் அதிகாரிகளுக்கும் , குடிமக்களுக்கும் உள்ள வித்தியாச அங்க அமைப்பு, ஒரே மாதிரியான வீடுகள், உலோக ஆடைகள் என அனைத்தையும் உள்வாங்கிக்கொண்ட சூனியன் அசட்டுத்தனத்தில் கோவிந்தசாமியின் நிழல் கோவிந்தசாமிக்கு நிகர் என்பதால் சற்று எரிச்சலுற்றிருப்பான்.
ஒரு நீலநகர மாந்தரை விசாரிக்கையில் வேறெங்கிலும் இருந்து நீல நகரம் குடிபெயர்வோர் இந்நகருக்கு ஏற்றார் மாறிவிடுவர் என்ற தகவலை கோவிந்தசாமியின் நிழல் உள்வாங்கியிருக்க வாய்ப்பில்லை. உள்ளங்கைகளின் சமாசாரத்தைவிட மூன்றாம் கண் முகம் சுழிக்க வைக்கிறது கோவிந்துவின் நிழலுக்கு!
சாகரிகாவை சூனியன் உதவியுடன் கண்டு வெற்றிக்குறியிடுவான் என பார்த்தால், அவளை நெற்றிக்குறியுடன் பார்த்த அதிர்ச்சி அவனுக்கு மட்டுமல்ல.. சூனியனுக்கே ஒரு மாதிரியாக தான் இருந்திருக்கவேண்டும்.
ஒருவேளை கோவிந்தசாமியே நேரடியாக வந்திருந்தால் நெஞ்சு வெடித்திருக்குமோ?
மேலும் படிப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.