அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 40)

கோவிந்தசாமியின் நிழல் காதலில் திளைத்துக் கொண்டிருப்பதில் துடங்குகிறது இந்த அத்தியாயம். புது காதல் வந்ததும் இயல்பாகவே பழைய காதலை தூக்கி போடுகிறது நிழல். தனது புதிய காதலியான “காதலி”க்காகக் காத்திருக்கிறது. செம்மொழிப்பிரியா (காதலி) அவனைப் பேசி மயக்கி, சாகரிகாவிற்கு எதிராய் வெண்பலகையில் ஒரு அறிவிப்பு செய்யுமாறு தூண்டுகிறது.
புது காதலில் கட்டுண்ட நிழலும் சொன்னவாறே நிழல் தான் ஒரு சுதந்திர பிரஜை என்றும், யாருக்கும் தான் ஒரு அடிமை இல்லையெனவும், சமஸ்தானம் அமைத்துத் தர அவசியம் இல்லையென்றும் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது.
செம்மொழிப்ரியாவும் பதிலுக்கு, சாகரிகாவை தாக்கிப் பதில் எழுதுகிறாள். அதில் நிழலையும் டேக் செய்கிறாள்.
இந்தப் பதிவுகளைச் சாகரிகா பிடித்துவிட்டாளென நரகேசரியின் மூலம் உறுதி செய்து கொண்டு நிழலை விட்டுப் பிரிந்து செல்கிறாள்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி