கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 10)

எதிலோ ஆரம்பித்து எங்கோ நுழைந்து இந்த அத்தியாயம் இங்கு வந்து நிற்கும் என்று நினைக்கவில்லை. எல்லாம் அந்த பாராவுக்கே வெளிச்சம். நீலநகரத்தில் கோவிந்தசாமி ஒருபக்கம், அவனது நிழலும் சூனியனும் ஒருபக்கம் என்று சுற்றி திரிந்து சாகரிகாவை அழைத்து செல்ல நினைக்கிறார்கள்.ஆனால் அவளுக்கு கோவிந்தசாமியின் மீது ஒரு பிடி அளவுக்கு கூட காதல் இல்லை என்பதை நீல நகரத்தின் வெண்பலகையில் படித்து தெரிந்துக்கொண்டு அதை கோவிந்தசாமியின் நிழலிடம் சூனியன் சொல்லும்போது அது அழுகிறது. சாகரிகா பொய் சொல்வதாகவும் கோவிந்தசாமி சங்கியே இல்லை சைக்கோத்தான் என்றும் வாதிடுகிறது.

சூனியனுக்கு உண்மை பொய்களை கண்டறியும் சக்தி இருப்பதால் அவன் கோவிந்தசாமியைப் பற்றி தெரிந்து வைத்திருந்தான்.இருந்தும் அவன் நிழல் பொய் சொல்வதால் ஒன்று சாகரிகா அல்லது கோவிந்தசாமியின் மூளைக்குள் ஊடுருவி உண்மையை கண்டறிய எண்ணுகிறான். அதுசரி இவன் வந்த வேலை என்ன?இங்கு வந்தது மாமா வேலை பார்ப்பதற்கு தானா என்று நாம் கேட்பது அவனுக்கு கேட்டிருக்கக்கூடும்.

ஒருவழியாக தன் சுயநிலை நினைவு வந்து தான் எப்படி மரணதண்டனைக் கைதியானான் என்று நம்மிடம் கூறுகிறான். அதன்படி நம் நகரை சேர்ந்த ஓர் ஊரில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாவிற்கு வந்து அவனுக்கு விதிக்கப்பட்ட பணியை செய்ய திட்டமிட்டான். ஆனால் கடவுள் அவன் திட்டத்தை புரிந்துக்கொண்டு சூழ்ச்சி செய்கிறார். அதன்படி அந்த நகரத்து ராணி அந்த விழாவிற்கு வருகை தருவதாக செய்தி வந்து அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அடுத்த அத்தியாயத்தில் என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ?

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி