பிரம்மனுக்கு அகலிகையை போல, நமது சூனியனுக்கு அதுல்யா என்னும் பேரழகி. தான், பிரம்மனை விடச் சிறந்த படைப்பாளியென நினைக்கிறான் சூனியன். அதற்கான காரணங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறான்.
கோகழி ஷேத்திரத்தின் மதில் சுவர்மீது வாழும் காளைகளை, திருமாளிகை தேவர் என்ற சித்தர் ஒரு யுத்தத்திற்காக இறக்கி விட்ட புனைவு அபாரம்.
ஆயிரம் கிளியோபாட்ராக்களின் அழகை கொண்டு பிறக்கவிருக்கும் நம் அதுல்யாவின் சரித்திரத்தை நம் சூனியன் முன்பே எழுதிவிட்டான்.
அதுல்யா பிறந்து வளர்ந்த கதையில் துடங்கி, கோவிந்தசாமியை சந்திக்கும் வரையிலான சிறிய கதைச்சுருக்கத்தை தெரிந்து கொள்கிறோம்.
கோவிந்தசாமிக்கும் அதுல்யாவிற்கும் இடையில் நடக்கும் உரையாடல் வெகுசுவாரசியாமாய் அமைந்துள்ளது.
தான் புதுச்சேரிக்கு வந்த வேலையை மறந்து, அதுல்யாவிற்கு துணையாகத் திருவாவடுதுறைக்கு செல்ல முடிவு செய்கிறான் கோவிந்தசாமி.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.