“நதிக்கறை” என்ற தலைப்பை பார்த்ததும் ஆசிரியரின் எழுத்துப் பிழையோ என்று முதலில் நினைத்தேன். தொடர்ந்து வாசித்துச் செல்கையில் அது சரயு நதியை கோவிந்தசாமி களங்கப்படுத்தியதன் ”கறை” எனத் தெரிந்தது.
தன் நிழலோடு போனவன் திரும்பாததால் கோவிந்தசாமி நீலநகருக்குள் நுழைகிறான். சாப்பாட்டுக் கடை தேடி திரிந்தவனுக்கு ஒரு தேநீர் கடை கூட கண்ணில் படவில்லை. அயர்ச்சியோடு நடந்து வரும் போதே அவனுள் பிளாஷ்பேக் ஓட ஆரம்பித்து விடுகிறது. சங்கிகளின் ஒட்டு மொத்த அடையாளமாக கோவிந்தசாமியை மீண்டும் ஒருமுறை நம்முன் காட்ட அதுவே ஆசிரியருக்கு போதுமானதாக இருக்கிறது. இந்தி, தேசியம், பாரத் மாதா கீ ஜே என எல்லாவற்றையும் சங்கிகளின் அடையாளமாக்கி கடற்கரை மாநாடு வழியாக கழுவி ஊற்றியிருக்கிறார். இனி வரும் அத்தியாயங்களில் சங்கிகளின் கொரானா கால கூத்துகளை கோவிந்தசாமி மூலம் இரசிக்த் தருவார் என நினைக்கிறேன்.
நீலநகர வெண்பலகையின் மொழி புரியாமல் அது பற்றிய சிந்தனையோடு(!) பூங்காவில் அமர்ந்திருந்த கோவிந்தசாமியை ஒரு பெண் சந்திக்கிறாள். அவள் அந்நகரவாசி பெண்கள் போல் இல்லை. தமிழ் பெண். தமிழிலேயே பேசுகிறாள். தனக்குப் பேச ஒரு துணை கிடைத்து விட்டது என கோவிந்தசாமி சந்தோசம் கொள்ள அவளோ, கோவிந்தசாமியை யாரென்று அடையாளம் கண்டு பிடித்து விடுகிறாள்? எப்படி கண்டுபிடித்தாள்? என்பதில் தான் சுவராசியமும், கூடவே இரு கேள்விகளும் எழுகிறது.
சாகரிகாவை இன்று சந்திக்க வந்திருப்பதாய் சொல்லும் அவளின் தோழி, சாகரிகா நேற்று வெண்பலகையில் எழுதியிருந்ததை எப்படி படித்திருப்பாள்? நீலநகர வாசியாக மாறாமல் அவளால் எப்படி அந்த மொழியை அறிந்து கொள்ள முடிந்தது?
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.