மானிடர்களின் உலகிலிருந்து சூனியர்களின் உலகம் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பினும், மனிதர்களுக்கு உண்டான அந்த பழி வாங்கும் குணம் சூனியர்களிடம் மேலோங்கி நிற்கிறது. ஆனால் சூனியர்களின் பலிவாங்கும் குணம் நியாயத்தின் போர்வையில் பதுங்கி இருப்பதாய் தான் படுகிறது.
மனிதர்களிடத்தில் இறுதியாய் எஞ்சியிருக்கும் எலும்பினை சூனிய உலகில் பெரும் மதிப்பாய் கருதுவாய் பாரா அவர்கள் எழுதியிருக்கிறார். தனது மனைவிக்காக குத்துச்சண்டை வீரன் முகம்மது அலியின் தொடை எலும்பினால் இறுதி ஊர்வல பல்லக்கை அலங்கரித்த அந்த சூனியன், இதுவே என் மனைவிக்கு பொருத்தம் எனவும் அவளின் அந்தரங்க காதலனாக அவன் இருக்கலாம் என்றும் நினைத்துக்கொள்வான். அந்த சூனியப் பெண் அவனின் தொடையில் படுத்து லயித்திருக்கும் தோரணையில் இவன் அலங்கரித்திருப்பாதாய் அழகாய் தோன்றியது.
சூனியனின் பழி வாங்குதலுக்கு அவன் தப்பிக்க வேண்டும். அதுவே அவ்வேளையில் அவனின் பெரிய கனவாக இருந்தது. அதற்கு புதியாய் வருகை தரும் அந்த நீல நகரம் அவனுக்கு துணைப் புரியுமா….??? எனும் தொனியில் முடிகிறது இந்த அத்தியாயம்.