அதிக விவரணைகள் இல்லாமல் மூன்றாவது அத்தியாயம் வேகமாக நகர்கிறது. கதை சூடு பிடித்துவிட்டது என்பார்களே, அது போல.
ஆனால் இன்னமும் எந்த கிரகத்தில் இருந்து சனிக் கிரகத்துக்கு அந்த கப்பல் பயணிக்கிறது என்பது தெளிவாக சொல்லப்படவில்லை சூனியர்களின் உலகம் என்பது எங்கே இருக்கின்றது என்பதும் தெரியவில்லை. அல்லது இவை இந்த கதைக்கு தொடர்பில்லாதவையாகவும் இருக்கலாம்.
எதிர்பாராமல் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியாத மயக்கத்தில் இருக்கின்ற நியாயாதிபதிகள், அதிகாரம் படைத்திருந்தும் பகுத்தறிவு என்பது எதுவும் இல்லாமல் வெறுமனே ஏட்டில் எழுதியவற்றை மட்டும் கண்மூடித்தனமாக பின்பற்றியபடி நம்மிடையே வாழும் அபத்தமான மனிதர்களை பிரதிபலிக்கிறார்கள்.
ஒளி சவரம், பனிக்கட்டி, பிசாசுக்காவல் போல இந்த அத்தியாயத்தின் புதிய வரவு பூகம்பச் சங்கு.
தண்டனை பெற்ற சூனியன் செய்த குற்றம்தான் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.. இருப்பினும் கூட, முதலில், இறந்தாலும் பரவாயில்லை தப்பித்தாக வேண்டும் என்றும் தப்பித்த பின்னர் வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்றும் அந்த சூனியன் மாற்றி மாற்றித் தீர்மானிப்பதற்கு பின்னால் இருக்கின்ற காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலை இந்த அத்தியாயம் மேலும் கூட்டி இருக்கின்றது.
ஒருவேளை சூனியன் வந்து மோதிய நீல நகரம் பூமியாகத்தான் இருக்குமோ.