சூனியனே சாகரிகாவை அடைய எண்ணுகிறானோ என கடந்த அத்தியாயங்களில் கோவிந்தசாமிக்கு ஏற்பட்ட அதே சந்தேகமே தற்போது நமக்கும் ஏற்படுகிறது.
மனிதர்கள் சறுக்கும் இடங்களாக மூன்றினை இங்கே சூனியன் குறிப்பிடுகிறான். தாய்ப்பாசம், உடலுறவு, மரணம். ஏறத்தாழ இதே காரணங்களை தான் யதியில் வரும் விமல் முதலான மற்றவர்களும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்கள். பா.ரா. இதனாலெல்லாம் ரொம்பவே வலிகளை அனுபவித்து இருப்பாராவென தெரியவில்லை.
மனித சிறுநீரே நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது எனக் கூறியதோடு அல்லாமல் காந்திய வழியைப் பின்பற்றியவரான நமது முன்னாள் பிரதமர் ஒருவர் தன்னை வைத்தே அதை பரிசோதித்துப் பார்க்கும் முயற்சியில் அதை அருந்தவும் செய்தார். அந்த இந்தியப் பிரதமரை அறிவீர்களா நீங்கள்?
தற்போதைய மாட்டு மூத்திரத்தைப் பரிந்துரைக்கும் மூளையற்ற சங்கிகள் அவர் வழி வந்தவர்கள் தான் என கூறி வெளுத்து வாங்குகிறார் பா.ரா.
15 அத்தியாயங்களையும் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக வாசித்து முடித்து விட்டேன். இனி வரும் அத்தியாயங்களுக்காக இனி ஒவ்வொரு நாளும் காத்திருக்க வேண்டுமே. அடுத்த சனிக்காக காத்திருக்கத் தொடங்குகிறேன். தூசியாய் சாகரிகாவின் நாசியின் வழி நுழைந்து நெற்றியில் இருக்கும் அவளின் பிறப்புறப்பில் அமர்ந்து அவள் மனதை படிக்கப் போவதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.