கதையில் யார் சொல்வதைக் கேட்பது அல்லது நம்புவது அல்லது பின்பற்றிச் செல்வது? சூனியனையா அல்லது எழுத்தாளர் பா.ரா.வையா?
கோவிந்தசாமியின் நிழலைப் போல் இன்னும் 120 பேரின் நிழல்களை உருவாக்கி விட்டான் சூனியன். அதாவது Fake id’s.
கோவிந்தசாமி வெண்பலகையில் எழுதியுள்ள கவிதை. கவிதையா அது? உவ்வே…. இதில் இறுதியில் ஜெய் ஸ்ரீராம் வேறு
இரங்கல் செய்திக்குக் கூட படித்துப் பார்க்காமல் ஹார்டின் விடும் நம்மூர் முகநூல் வாயர்கள் போலவே தன் சோகத்தைப் பகிர்ந்ததைப் படித்து வாசிக்கத் தூண்டும் சிறப்பான பதிவு என்ற மறுமொழி வரவும் கோவிந்தசாமியின் நிழல் அழத் தொடங்கி விட்டது.